அற்புத கோட்டை
இன்னும் நாயகிகள் அந்த பத்தியை நினைத்த படி அப்படியே அமர்ந்திருக்க மணி இரவு ஒன்பதரையானதை உணர்ந்த தான்யா உடனே எழுந்து அந்த பாதையை விட்டு வெளியே செல்ல கதவருகில் செல்ல அவளுக்கு முன் அரணாய் அகியும் விகியும் ஆளுக்கொரு திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்...
தான்யா : அகி விகி நகருங்க... நா வெளிய போகனும்.. அகி கதவ திற டா என அதை காட்ட அகியோ அவளையும் கதவையும் மட்டும் திரும்பி திரும்பி பார்த்தது
நிரு : அகி வழி விடு டா... அவ ரக்ஷவ சாப்ட வைக்க தான் போறா.. அவன் தூங்கனும்ல என கூற அதற்கும் அகி நகரவில்லை...
கானகத்தில்
யுகி யமதர்மனை முறைத்து கொண்டிருக்க யமதர்மன் கத்துவதை நிறுத்தியதும் திரும்பி அவன் வாள்களை எடுக்க சென்ற ரக்ஷவ் திடீரென " யுகி உன்ன எதுவும் செஞ்சு சத்தமெழுப்பக் கூடாதுன்னு சொன்னனா இல்லையா " என வாளை எடுத்து இடையில் பொருத்தியவாறு யுகியை காண திரும்பினான்...
யுகி யமதர்மனின் தலையை கடித்து முழுங்கி விட வாயை திறந்து வைத்து இடையில் தடுத்த ரக்ஷவை " நான் அவன சாப்ட்டாகனும் " என்ற ஃமைண் வாய்சுடன் பார்த்து கொண்டிருந்தது...
ரக்ஷவ் : உனக்கு சாப்ட நம்ம வீட்ல எதாவது இருக்கும் டா.. இவன எதுவும் பன்னாத வா.. என் குருக்கள் வர்ரதுக்குள்ள நம்ம வீட்டுக்கு போகனும் என ஒரு கயிறை யமதர்மனின் காலில் கட்டி விட்டு அதன் மறு முணையை யுகியிடம் கொடுக்க யுகி " இன்னைக்கு நீ தப்பிச்ச டா " என யமதர்மனை முறைத்தவாறு அந்த கயிறை வாயால் இறுக்கி பிடித்து கொண்டது
யுகி மீது ஏறி அமர்ந்து கொண்ட ரக்ஷவ் ஒன்றும் புரியாமல் கீழே கிடந்த யமதர்மனை நோக்கி வாயில் கை வைத்து
ரக்ஷவ் : சத்தம் வந்துச்சு என இழுத்து விட்டு கழுத்தறுப்பதை போல் சைகை செய்தான்... யமதர்மன் முளித்தபடி சரியென தலையாட்டினான்...
ரக்ஷவ் : யுகி போலாம் என யுகியிடம் கூறவும் யுகி அங்கிருந்து வேகமாய் கோட்டையை நோக்கி ஒவ்வொரு இடங்களில் இருந்து தாவி ஓட யமதர்மன் தான் தரதரவென வழியெங்கிலும் வலியில் அலரக் கூட இயலாமல் இழுத்து வரப்பட்டான்...
ESTÁS LEYENDO
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasíaஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...