ஐந்து வயது சிறுமியை பதவி ஆசைக்காய் நரபலியிட்ட கொடூரம்
என ஓடிய பரபரப்பான செய்தியை செவி சாய்த்த சித்ரனின் கரங்கள் இரண்டும் சினத்தில் இருக... அவனது ஒவ்வொரு நரம்பும் அதி பயங்கரமான கோவத்தால் மூளைக்கு வேகமாய் பாய.... கண்களின் கருமுளி அங்குமிங்கும் அதிவேகமாய் அசைய... கை முஷ்டியை முருக்கி எதிலோ குத்த போக... அதே நேரம் கதவு திறக்கும் சத்தமும் கேட்க.... அவன் கை செவுரை பதம் பார்க்கும் முன் சரியாய் பிடித்திருந்தான் அவன்...
ஆறடி உயரத்தில் அழகான சிவந்த நிறத்தில் கட்டுமஸ்த்தான உடலில் காக்கி உடை சூழ்ந்திருக்க... அவசரத்தில் ஓடி வந்திருக்கிறான் என்பதற்கு அடையாளமாய் முகத்தில் வேர்வை முத்துக்கள் அரும்ப நின்றான் சித்ரனின் தோழன் ருமேஷ்யவன்
ருமேஷின் வருகையை அறிந்தும் சித்ரனின் கோவம் மட்டுப்பட மறுக்க.. அவன் பிடியையும் மீறி தன் கரத்தை சுழற்றி விடுவித்த சித்ரன் வெற்றிகரமாய் செவுற்றில் இடிக்க... அவன் வேகத்திற்கும் கோவத்திறும் செவுரின் செதில் உடைந்து ருமேஷின் முகத்தை பதம் பார்க்க எகிர... ருமேஷ் தன் கரத்தை பாதுகாப்பிற்காய் அவன் முகத்திற்கு குறுக்கே கொண்டு வர... அவனின் கரத்தை அச்செதில் கிழிக்கும் முன் கண நேரத்தில் அதை பிடித்த சித்ரன் கதவின் புறம் தூக்கி எறிந்தான்...
அதே நேரம் கதவு மீண்டும் திறக்க பட.. " டேய் மச்சான் " என்றவாறே உள்ளே வந்த ருமேஷின் ஜாடையை ஒத்த இன்னோறுவன் திடுக்கிட்டு நின்றான்... அவன் தலையை உராசி விட்டு சென்ற அந்த செதிலை கண்டு...
சித்ரன் இன்னும் தன் சினத்தை அடக்க இயலாது கரத்தை பதம் பார்க்க முயல...
ருமேஷ் : ஸ்டாப் இட் சித்ரன்... என அவன் கத்திய கத்தில்... அவன் புறம் திரும்பிய சித்ரனின் கருப்பு கன்னாடிகளின் பின் இருந்த கண்கள் கடுங்கோவத்தில் செக்கசெவேளென சிவந்து கொண்டிருப்பது கன்னாடியையும் தாண்டி ஒளிர... அதை கண் கூட கண்ட ருமேஷின் முகத்தில் சில நொடிகள் அதிர்ச்சி அப்பட்டமாக... அவன் இருகிய வதனம் இன்னும் இருகுவதில் தன் நிலை அடைந்தவன்... கதவருகில் நின்றவனை ஏறிட்டான்...
VOUS LISEZ
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...