பராக்ரம வீரன்களை விடுத்து மற்ற அனைவரும் உறைந்து நிற்க.. நீலி ரக்ஷவ் ஐலா மூவரும் அம்மூவர் யாரென தெரியாமல் முளித்து கொண்டிருக்க நாகனிகளும் சஹாத்திய சூரர்களும் யாளி வீராங்கனைகளும் உண்மையில் அங்கேயே பனிக்கட்டியென உறைந்திருந்தனர்...
அம்மூன்று வம்சத்தினரும் வாழ்கையில் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்ந்திருக்கவில்லை... மிதரவர்தனன் விஞ்ஞவெள்ளன் இனி மேலுமா அங்கு இருப்பர்...
கண்ணிமைக்கும் நொடி பொழுதில் இருவருமே அங்கிருந்து மாயமாய் மறைந்திருந்தனர்..
இரட்சகன்கள் மூவரும் மெல்ல கீழே இறங்க இப்போது அனைவரும் எழுந்து நின்றிருக்க.. நாகனிகள் மூவருக்கும் இதயம் துடிக்க மறந்து மறத்து போய் நொடிகள் கடந்திருந்தது...
சித்தார்த் ருத்ராக்ஷ் ஆதியன்த் மூவரின் கண்களும் தன் நிலை பெற்றதும் தனிச்சையாய் கண்ணீர் ஊற்றெடுத்து கண்கள் குளமாகின...
பராக்ரம வீரன்கள் என்ன நடக்க போகிறதோ என எச்சிலை கூட்டி விழுங்க அங்கிருந்த அனைவரின் இதயத்தை உருக்கவதை போல் வாயை மூடி வெடித்து அழுதாள் அனு...
கீழே மடிந்து விழுந்த அனுவை ருத்ரா வேகமாய் வந்து பிடிக்க .. அவனது முகத்தை வெகு அருகில் கண்ட அனு இன்னும் கத்தி அழுதாள்...
அவளின் கதறல் இரட்சகன்களை தவிர்த்து மற்ற சில இதயங்களையும் கனக்க வைத்தது...
அனு : ருத்ரா என அழுகையுடன் அவன் கன்னம் வருட ருத்ராவினாலும் அழுகையை அடக்க முடியவில்லை...
ருத்ரா : அம்மா என கத்தி கொண்டே அவளை அணைத்து கொண்டான்...
திவ்யாவும் ப்ரியாவும் அப்படியே நிற்க அனுவின் பார்வை சித்து ஆதியை தீண்ட இருவரும் அவள் கண்ணீர் நிலத்தை தொடும் முன் ஓடி சென்று அவள் அணைப்பிற்குள் அடங்கினர்...
அனு எவ்வளவோ முயன்றும் அவள் கண்ணீரை நிறுத்த முடியவில்லை... ஆசை தீர மூவரையும் உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் கொடுத்து அழுத படியே அணைத்து கொண்டாள்...
CITEȘTI
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantezieஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...