துஷ்ரிகளின் சத்தத்தில் சட்டென எழுந்த சித்தார்த் நித்யா விழும் முன் அவளை பிடித்த படியே அந்த துஷ்ரியின் கண்களை கண்டான்...
நொடி கணக்கில் அதன் சத்தம் அவனது சக்திகளால் அடங்கிட அவன் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்த துஷ்ரியை தன் வாளால் ஒரே சீவில் மூர்ச்சையாக்கினான்...
ஆயினும் துஷ்ரிகளின் சத்தம் எழுவதை கண்டு நித்யா துஷ்ரந்களோ அல்ல அமைச்சன்களோ அங்கு வந்து விடுவார்காளோ என மிரள அவளது மனமோ தன் ஆரித் அருகில் இருந்தால் மரணமே வந்தாலும் நான் எதிர்ப்பேன் என போர் கொடி தூக்கி நின்றது...
ஆனால் உண்மையில் அது துஷ்ரிகளின் சத்தமில்ல... கோட்டையின் நாழா புறத்தையும் ஆக்ரமித்த ராகவ் ராம் கார்த்திக் மற்றும் அஜயின் சத்தம்...
முதலில் அந்த துஷ்ரி கத்த தொடங்கவும் எங்கு எதாவது ஒரு துஷ்ரியையை எழுப்பி அது அரவம் எழுப்ப தொடங்கி விட்டால் முன்பே திட்டம் தீட்டியதை போல் ஓநாய் உருவான நாயகன்கள் நாழ்வர் துஷ்ரிகளின் ஓசையை எழுப்பினர்...
இந்த ஓசை அப்படியே துஷ்ரிகளின் ஓசையை ஒத்திருப்பதால் மற்றைய துஷ்ரிகள் சத்தத்தை எழுப்பாது... அத்துடன் சத்தமெழுப்புவது துஷ்ரிகள் இல்லாததால் துஷ்ரந்களும் எழாது.. துஷ்ரந்களுக்கு எழும் வரை பார்வை கிடையாது.. அவைகள் துஷ்ரிகளின் ஓசையினால் மட்டும் தான் எழுவர்... அதுவே நம் நாயகன்களுக்கு சாதாகமாய் அமைந்ததால் மித்ரன் மிதுன் இருவரும் நாயகிகளின் அறை வீற்றிருக்கும் திசை நோக்கி செல்ல துருவன் மற்றும் அருண் யாவரும் அறியாமல் பாதாள சிறையுள் நுழைந்தனர்...
அஷ்வித் கார்த்திக்குடன் ஆதவ் ராகவுடனும் வருண் அஜயுடனும் சென்று அவர்களை எந்த ஒரு ஆபத்தும் நெருங்காத படி பார்த்து கொண்டனர்...
நித்யா : தா..ம் இங்கிருந்து உடனே செல்ல வே..ண்டு..ம்.. இங்ஙனம் வீற்றிரு..ப்பது த..மக்..கு ஆ..ஆபத்து என திக்கித் தினறி கூற அவளது குரலில் அங்கிருந்த படியே தன் தோழன்கள் திட்டத்தை சரியாய் செயல் படுத்துவதை பார்த்து கொண்டிருந்த சித்தார்த் திரும்பி பார்த்தான்...
KAMU SEDANG MEMBACA
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasiஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...