மனதில் அளவற்ற நிம்மதியையும் ஆனந்தத்தையும் சுமந்து அற்புத கோட்டைக்குள் நுழைந்த நாயகர்களை வரவேற்த்தது என்னவோ யாளிகளின் சினமுற்ற உறுமல் தான்..
அந்த உறுமலில் நாயகர்கள் திடுக்கிட குட்டி நாயகர்களும் உடன் ஐலா மற்றும் ரக்ஷவும் மிரண்டு போயினர்..
அந்த உறுமலை கேட்டதுமே முதலணி நாயகர்கள் அனைவரின் வதனத்திலும் தீவிரம் கூடியது... உண்மை தான்.. அது சாதாரணமாய் எடுத்து கொள்ளும் அளவிற்கு வீரயமற்ற ஒன்றல்ல... யானையாளிகளாவது சஹாத்திய சூரர்களின் வரவு தென்பட்டால் தன் பிளரலை சுதந்திரமாய் வெளியிடும்.. ஆனால் இவ்வுறுமல்களோ இருவது வருடங்களுக்கும் மேலாக அமைதியாய் இருக்கும் சிம்மயாளிகளால் வெளி வரப்பட்டது...
அந்த உறுமலிலே அது சத்தீஷின் சிம்மயாளியான காற் சின்னம் கொண்ட வெண்ணிற சிம்மயாளி விகி என புரிபட அவைக்கு என்றும் மருத்துவம் பார்க்கும் வீர் மற்றும் ரனீஷ் உடனே இரண்டிரண்டு படிகளாய் தாண்டி மாடிக்கு ஓட அவர்கள பின் தொடர்ந்து அவசரமாய் ஓட போன நாயகர்களுள் ரித்விக்கை பிடித்து இழுத்தான் ருத்ராக்ஷ்..
ருத்ராக்ஷ் : மாமா எங்க போறீங்க நீங்க
ரித்விக் : இது விகியோட உறுமல் ருத்ரா.. என்ன ஏதுன்னு தெரியல... போய் பாத்தா தான் தெரியும்...
ரக்ஷவ் : இங்கையே ஒரு வாரமா இருக்கேன் எனக்கே மேல ஒருத்தன் டேரா போற்றுக்கான்னு தெரியாதே என அப்பாவியாய் கேட்க
சேவன் : அடடே ரக்ஷவா... அது நீர் சில தினங்கள் முன்பிருந்து காண ஆவலுடன் ஏங்கும் சிம்மயாளிகளில் மூன்றாவது சிம்மயாளியின் உறுமல்.. விகி என்பது மனிதனின் நாமமல்ல... சிம்மயாளியின் நாமம் என பதட்டத்துடன் கூறவும் இளையவர்கள் அனைவருக்கும் மனதில் ஒரு பயபந்து உருள தொடங்கியது...
நிரு : அத்தான் நீங்க போய் என்னன்னு பாருங்க... நாங்க கீழயே இருக்கோம்..
ப்ரியா : விகி கோவமா இருக்குன்னு மட்டும் தெரியிது அண்ணா... அத மட்டும் சீக்கிரம் சரி பன்னுங்க... ரொம்ப தாக்குப்புடிக்க வைக்காதீங்க என கண்களில் தவிப்புடன் கூறியவள் அவன் தலையசைத்து சென்றதும் இவர்களை நோக்கி திரும்பினாள்...
VOCÊ ESTÁ LENDO
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasiaஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...