மாயம் - 68

289 27 72
                                    

வைஷு வீலென கத்த அவள் மீது பாயப்போன வாள் எதிலோ க்ளிங்கென இடித்து வெளியே பறக்க மீண்டும் பாய எத்தனித்த அம்மண் சிலை சல்லி சல்லியாய் சிதறியது அந்த வாளினால்...

வைஷு தனக்கு இன்னமும் ஏதும் நேராததை உணர்ந்து உடனே கண் திறந்து நோக்க அவள் முன் அந்த மண் சிலை சிதறி கிடந்தது...

சற்றே தலையை நிமிர்த்தி நோக்கியவள் நொடியேனும் சிந்திக்காமல் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்... அவளின் இதயம் படபடப்பதையும் உடல் வெடவெடத்து போயிருப்பதையும் உணர்ந்து அவள் பாதுகாப்பாக தான் உள்ளாள் என உணர்த்தும் வகையில் அவளை மென்மையாய் அணைத்து கொண்டான் வருண்...

வாளை இறுக்க பற்றியிருந்த மறு கரம் கீழ் தொங்க விடப்பட்டு இருந்தது

வருண் : சமுத்ரா.. என மெதுவாய் அழைத்தான்...

தீரா : வைஷுவின் முழு நாமம் வைஷ்ணவி சமுத்ரா என்பதை தண்டோரமடித்து நினைவு படுத்துகிறேன்.. தாம் எவருக்கும் அது நினைவிலிருக்க வாய்ப்பே இல்லையென்பதால்...

அவன் மூச்சு காற்று பட்டு கன்னம் சிலிர்க்க தன் அழுகையை கட்டுப்படுத்தி அவனை விட்டு பிரிந்து நின்றாள்...

வைஷு : சா..சாரி.. அ..த்தா..ன்... என கேவலுடன் கூறிவளை நோக்கி தன் கசந்த புன்னகையை வீசியவன்..

வருண் : ஆர் யு ஓக்கே என மிருதுவாய் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்து தலையசைத்தாள்...

வைஷு : ம்ம்ம்

வருண் : கண்ணீரோட பாக்குரதுக்கு உன் முகம் அழகா இல்ல டா என அவளின் கண்ணீரை அவன் துடைக்க அவன் ஸ்பரிசம் பட்டு முதல் முறையாய் நாணம் என்ற உணர்வு தலை தூக்கியது

வைஷு : சரி அத்தான்.. இனிமே அழ மாட்டேன்..

வருண் : குட்... இங்க என்ன செய்ர..

வைஷு : அது நா... ஐலா அதித்தியோட வந்தப்போ இந்த ரூம் என்றவாறு அவனை விட்டு விலகி அந்த அறை அருகருகில் செல்ல போனவளை வருண் திடீரென பிடித்திழுத்து அவர்கள் மீது பாய எத்தனித்த மற்றொரு மண்சிலை ஒன்றின் தலையை தனியே கொய்தெடுத்தான்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora