மாயம் - 61

276 25 106
                                    

ரக்ஷவை எதிர்பார்க்கா எமதர்மன் அதிர்ந்தாலும் அவன் ஏவிய அம்பை பிடுங்கி தூக்கி எறிந்தவன் எகத்தாளமாய் எழுந்து நின்றான்...

எமதர்மன் : என்ன சிறுவா.. எம்மை காக்க சஹாத்திய சூரர்கள் உம்மை காவலில் விட்டு சென்றனரோ.. ஹா கோழை சூரர்கள்

ரக்ஷவ் : ஏன் நான் காவல்ல இருந்தா அதுல என்ன நொட்டம் கண்டுப்புடிச்ச நீ என அதே முறைப்புடன் கேட்டான்...

யமதர்மன் : சர்ப்பலோக நாகமனிதர்களுக்கே தலைவன் என்னை காவல் காக்க சிறுவனா.. ஹாஹா

ரக்ஷவ் : உனக்கெல்லாம் நான் ஒருத்தன் போதும்

எமதர்மன் : ஹே சிறுவா.. யான் யாரென்பதை அறியாது வார்த்தைகளை விடாதே.. பின் விழைவுகளை சந்திக்கும் பொழுது உமக்கு அழ கூட திராணியிருக்காது

ரக்ஷவ் : நான் யாருன்னு தெரியாம நீ டயலாக் விடாத முதல்ல

எமதர்மன் : கூற கூற என்னை அவதித்து கொண்டே இருக்கிறாய்... உன்னால் எம்மை என்னடா செய்து விட முடியும்.. முட்டாள் பொடியன் நீ..

ரக்ஷவ் : ஹோ பொடியனெனில் உமக்கு வீரம் கூடிவிடுமோ.. என இவன் அப்போதும் புருமுயர்த்தியபடி கேட்டான்...

எமதர்மன் : உன்னை என் செய்கிறேன் பார் என அவனின் நஞ்சு பற்களுடன் முன்னேறி வந்தவனை நோக்கி மற்றொரு அம்பை கண்ணிமைக்கும் நொடி போழுதில் பாய்ச்சிய ரக்ஷவ் யுகியின் மீதிருந்து தாவி கீழிறங்கினான்...

ரக்ஷவ் : யுகி.. அகி விகியிடம் இங்கு நிகழும் எவ்வொரு அரவமும் கோட்டையில் உள்ள தாயர்களுக்கு தெரிய கூடாதென தெரிவி என கூறியவனின் கட்டளையை ஏற்று தன் சகோதரர்களுக்கு மனதின் மூலமாகவே உணர்த்தினான் யுகி

அறையில் இருந்த படி இதை அறிந்த அகியும் விகியும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு ரக்ஷவிற்கு ஆபத்தீடேரினாலும் அதை தடுக்க யுகி இருக்கிறானென்பதால் அவர்களும் ரக்ஷவின் கட்டளையை ஏற்று அந்த கண்ணாடி அறை கதவை சட்டென மூடினர்...

மோகினி : என்னாச்சு அகி விகி.. ஏன் கதவ மூடுனீங்க என கேட்டதற்கு அகி சட்டென எம்பி அப்போதே தோன்றியிருந்த ஒரு பத்தியை காட்டியது...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Where stories live. Discover now