அவர்களை சுற்றி இருந்த மரங்களுக்கிடையே ஒரே நேரத்தில் பயங்கரமாய் சீரும் ஓசைகள் வலு பெற ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட மித்ரன் வருண் அருண் ஆதவ் நாழ்வரும் ஒரே நேரத்தில் அவரவர் மிருக உருவத்தை தத்தெடுத்து ஆகாயத்தை நோக்கி பறந்தனர்...
யாளி வம்ச வீராங்கனைகள் காற்றில் ஒரு முறை அவர்களின் வாள்களை சுழற்றி அதன் வேகத்தையும் ஜொளிப்பையும் கண்டதும் ஒரு ஏளனப்புன்னகையுடன் போருக்கு தயாரென தயாராய் வருவோரை எதிர்த்து நின்றனர்...
நாகனிகள் மூவரும் அவரவர் சக்திகள் உயிர் பெற்று விண்ணில் அனு கரு நீல ஒளியிலும் திவ்யா நீல நிற ஒளியிலும் ப்ரியா வெண்ணிற ஒளியிலும் பறந்தவாறு கண்களாலே வருவோரை கொல்ல காத்திருக்க.. நம் சஹாத்திய சூரர்களுக்கு சமமாய் ரக்ஷவும் அவனது வாளுடன் " எவன் தான் வரான்னு நானும் பாக்குறேன் " என எதிர்த்து நின்றான்...
ஆரவாரம் இன்றி பலமாய் எம்பி குதித்து அவர்கள் முன் வந்து நின்றான் ஓநாய் உருவத்திலிருந்த விஞ்ஞவெள்ளன்... அவனுக்கு மேல் தன் நீண்ட இறெக்கைகளை நீட்டி விரித்து கொண்டு ஆகயத்திலே ஒரு டைவ் அடிப்பதை போல் ஒரு சுற்று சுற்றி விட்டு சென்றான் இறெக்கைகளுள்ள ஓநாய் உருவத்திலிருந்த இரண்டாம் விஞ்ஞவெள்ளன்...
இரண்டாம் விஞ்ஞவெள்ளன் காற்றை கிளித்து எம்பும் முன் அவனது நெஞ்சிலே தன் ஒரு காலால் இடித்து மறு காலால் அவன் முகத்திலே ஒரு எத்து விட்டான் அஜய்...
இதை சற்றும் அவன் எதிர்பார்க்காததால் அடி தொண்டையிலிருந்து குரூரமாய் ஊளையிட்டான்... அவனது அந்த குரூர ஊளை நம் நாயகர்களே எதிரிபாராத வகையில் வேதபுரத்து காட்டின் அடர்ந்த பகுதியிலிருக்கும் எண்ணிலடங்கா ஓநாய்களை சுரண்டி எழுப்பி விட்டது...
இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் எதிர்பார்க்காத ஓநாய் விஞ்ஞவெள்ளன் சற்றே பின் வாங்க முயற்சிக்கும் முன் தூர கேட்ட அந்த பல ஓநாய்களின் ஊளை சத்தம் அவனது இதழில் எகத்தாளமான புன்னகையை பூக்க செய்தது...
ESTÁS LEYENDO
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasíaஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...