சஹாத்திய சூரர்கள் அனைவரும் சில பல புது மருந்து கட்டுக்களுடன் அரை மயக்கத்தில் ஏதோ முனகிக் கொண்டிருந்த யமதர்மனை கண்டு அதிர்ந்தனர்...
அவன் இவர்கள் வந்ததை கூட அறியாமல் அக்கடாவென மல்லாக்க படுத்து கிடந்தான்..
வீர் அனைவருக்கும் உடைந்திருந்த ஜன்னல் கம்பியை சுட்டிக் காட்ட அனைவரும் சற்று குழப்பத்துடன் வெளி வருகையில் அஷ்வன்த் குனிந்து ஏதோ ஒன்றை பார்த்து கொண்டிருந்தான்...
அவனுக்கு முன் நின்றிருந்த சேவன்
சேவன் : ஏன் சூரரே இவ்விடம் மாத்திரம் பள்ளமாக இருக்கிறது... என குட்டி பள்ளம் போல் பதிந்திருந்த யுகியின் காலச்சில் குதித்து கேட்க அவனை மீண்டும் தூக்கிய அஷ்வன்த்
அஷ்வன்த் : சிம்மயாளிகல்ல யாரோ ஒருத்தர் வெளிய வந்துர்க்காங்க என தன் தோழர்களை கண்டான்...
சரண் : அதுக்கு வாய்ப்பு இருக்கா என்ன... சிம்மயாளிகள் யாரும் கூட இல்லாம வெளிய தனியா வர மாட்டாங்களே...
அஷ்வன்த் : கூட யாராவது இருந்துர்க்களாம் டா... ஹ்ம் சரி அத நாளைக்கு கேட்டுக்களாம்... தூங்க போகலாம் வாங்க..
முகில் : ஏன்டா... கோவன்கள் இறந்தத பத்தி ஒரு பத்தி இருந்ததா சொன்னாங்களே... அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க என தன் இரு கையையும் பன்ட் பாக்கெட்டினில் விட்டு கொண்டு அந்த குளிர் காற்றை அனுபவித்தவாறு வினவினான்...
வீர் : தெரியல முகிலா.. ஆனா நாம அத எழுதலன்னு மட்டும் எனக்கு தெரியும்...
ரனீஷ் : க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் கூட அத அப்போ எழுதல.. எனக்கு இன்னும் நினைவு இருக்கு
மயூரன் : ஏன் அதை கோவன்களே மீண்டும் வந்து எழுதியிருக்க கூடாது சூரரே
ரவி : அதற்கு வாய்ப்பில்லை சேவா.. எங்க பதிமூணு பேருக்குமே அத பத்தின நினைவு போய்டுச்சு.. அவனுங்களுக்கும் தான்... அதனால அவங்க எழுதியிருக்க முடியாது
அர்ஜுன் : ஆனா வேற யாரால எழுதியிருக்க முடியும்.. நம்மள தவிற இந்த ஐயாயிரம் வர்ஷத்துல அத யாரும் திறக்கல.. யாளிகள தவிர்த்து வேற யாருக்.... ஒருவேளை யாளிகள் எழுதியிருக்க வாய்ப்பிருக்கா என சட்டென கேட்கவும் அனைவருக்கும் வாய்ப்பு இருக்கா என ஒரு யோசனை பரவ
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...