ஏதேனும் முக்கிய வேலை இருந்தால் அதை முடித்து விட்டு படிக்கவும்... எவரையாவது இவ்வளவு நேரம் வாசிக்க வைத்து நேரத்தை செலவழிக்க வைத்திருந்தால் தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்....
____________________________________________க்ரிஷ்ஷின் கரத்திலிருந்து பாய்ந்த தீயினால் ஆன பெரும் கதிர் சரியாக அவர்களின் பத்து எதிரிகளை மாத்திரம் சூழ்ந்து கதற வைத்தது...
வளவன் அங்கிருந்த ஒரு அம்புலன்சில் அனைவரையும் ஷேஷ்வமலை அருகில் அழைத்து செல்ல முயற்சித்து கொண்டிருக்க நிகழ்வதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த திவ்யா எந்நேரமானாலும் இங்கு மக்கள் நடமாட்டம் கூடலாம் என தீவிரமாய் யோசிக்க அவள் சிந்தனைகளை கணக்கச்சிதமாய் பிடித்த அனு அவள் கரத்தை பிடிக்கவும் திவ்யா சகோதரியை நோக்கினாள்...
அனு காத்திருப்பது வீண் என கண்களாலே கூற அதை புரிந்து கொண்ட திவ்யா தலையசைத்து அவள் நீல நிற அழகிய கண்களால் போரிட்டு கொண்டிருந்தவர்களை நோக்கினாள்...
அவளின் சக்தி அங்கிருந்த அனைவரையும் கண்ணிற்கெட்டாதவாறு சூழ்ந்தாலும் தன்னவளின் மாய சக்தியினை காணாமலே உணர்ந்து அந்த வாகனத்தின் புறமாய் திரும்பிய இந்திரன் இறுதியாய் கண்டது அவனவளின் நீல நிற கண்களை மட்டும் தான்...
அடுத்த நொடியே அங்கு அனைவரும் மறைந்திருந்திருந்தனர்... அந்த வாகனத்தை விட்டு வெளியேறிய ப்ரியா அந்த மருத்துவமனையை காலத்தின் உதவியுடன் பழைய நிலைக்கு கொண்டு வந்தாள்...
வளவன் : ப்ரியா வா சீக்கிரம் என திடீரென கத்தியதில் மருத்துவமனையில் கவனம் பதித்திருந்த சகோதரிகள் மூவரும் இப்புறம் திரும்ப அவர்கள் பின் காட்டிலிருந்து சர்ப்பலோக வாயிலின் வழியாக நொடிக்கு ஒரு நாகமனிதன் அதிவேகத்தில் வெளியேற தொடங்கினான்...
இதை சற்றும் எதிர்பார்க்காத நாயகிகள் அதிர்ச்சியுடன் வளவன் மோகினியை கண்டு விட்டு தாங்கள் அமைதியுறும் நேரம் இதுவல்ல என்பதனை உணர்ந்து களத்தில் இறங்கினர்...
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...