மாயம் - 8

336 28 26
                                    

கண்கள் முன் கண்ட காட்சியினை நம்ப இயலாமல் நின்றனர் அனைவரும்.. தாங்கள் சிறு வயது முதல் மாமா மாமா மாமா / அப்பா அப்பா அப்பா என வால் போல் சுற்றி திரிந்தவர்கள் இத்துனை வருடமாய் இறந்து விட்டனர் என நம்பி விட்டு அவர்களின் முக ஜாடையை உறித்து வைத்ததை போல் முன் கூட இல்லாமல் தலைக்கு மேல் பறநௌது கொண்டிருந்த மூவரையும் வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தனர் நமது பராக்ரம ராஜ வீரர்கள்..

விஞ்ஞவெள்ளனின் நிலையை சொல்லவா வேண்டும்... கோவன்களுக்கே நடுங்கியவன் அவனின் அழிவை குறிக்க கூடிய இரட்ச்சகன்களென தெரிந்தால் சாதாரணமாகவா இருப்பான்...

முகம் வெளிரி போய் கண்ணிமைக்க மறந்து அம்மூவரை பார்த்து கொண்டிருந்தான்... எங்கிருந்து ஆதியன்த்திற்கு அவ்வளவு கோவம் வந்ததோ சட்டென தன் இரு கரங்களையும் விஞ்ஞவெள்ளனை நோக்கி கத்தியை போல் கூராக்கி இழுத்து சென்றவன் சட்டென விஞ்ஞவெள்ளன் காற்றாய் மறைந்ததும் ஒரு பலத்த அதிர்வுடன் நிலத்தில் காலை பதித்தான்..

அவனின் ஒரு கால் பதிந்த அதிர்வினால் மற்றவர்கள் தடுமாற... அதை இன்னும் அதிகரித்து வைப்பதை போல் மடாரென குதித்தான் ருத்ராக்ஷ்...

எப்படியோ ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டு சமாளித்து நின்ற நாயகன்கள் பத்து பேரும் " என்ன இவன் இன்னும் இறங்கல " என்பதை போல் ஒரு சேர மேலே நோக்கினர்...

அவர்களை தன் சிகப்பு விழியில் பேரலை அடிக்க பார்த்து கொண்டிருந்த சித்து அவனை நோக்கிய அந்த பத்து விழிகளையும் நேருக்கு நேர் கண்டதும் அவனது முகத்தில் ஒரு நொடிக்கும் குறைந்த ஒரு சிறு தருணத்தில் இதழோரம் ஒரு குறுநகை பூத்தது..

அதை குழப்பமாய் இவர்கள் பார்த்திருந்த நேரம் சட்டென ஒரே நேரத்தில் சித்ரன் ருத்ராக்ஷ் ஆதியன்த் மூவரின் தலையும் சுற்ற... இவர்கள் சுதாரிக்கும் முன்னே சித்ரன் அங்கிருது மாயமாய் மறைய மற்ற இருவர் மண்ணில் சரிந்தனர்...

தங்கள் முன் குரு தந்திராவின் குரல் எதிரொலிக்க அந்த கம்பை இறுக்கி பிடித்தவாறு நின்ற தர்மன் ஐயாவை கண்டு அதிர்ந்து போயினர் நமது சஹாத்திய சூரர்கள்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora