க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷின் கண்கள் ஒரே செய்தியை எடுத்து கூற அவரவர் மனைவிகளுள் உரு கொண்டிருந்த கரு அவர்களை அதிர்ச்சியாக்க செய்தது...
மருத்துவ துணைகளின்றி இம்மூவருக்கும் பெண்கள் மூவரும் முதல் நாளிலே இத்துனை சோர்வுடன் இருப்பதற்கான காரணமும் புரிந்தது...
ஆனால் அதை ஏற்க தான் மனமும் மூளையும் தயாராகவில்லை..
சத்தீஷ் சிந்திக்காமல் அந்த அறையிலிருந்து வெளியேறி பால்கெனிக்கு ஓடினான்.. அவன் ஓடும் சத்தம் அவனது சகோதரன்களுக்கு கேட்டாலும் அவர்கள் வெளி வரும் நிலையில் அப்போது இல்லை...
பால்கெனிக்கு சென்று ரவியின் தோலை குலுக்கு குலுக்கென குலுக்கி எடுத்த சத்தீஷ்...
சத்தீஷ் : ம..ச்..சி.. ஒரு குழந்தை உருவானா அதோட சிம்ப்ட்டம்ஸ் எத்தன நாள்ள தெரிய ஆரம்பிக்கும்.. ஸிம்ட்டம்ஸ்னு எத கேக்குறேன்னா அவங்க கன்சீவா இருக்காங்கன்னு கன்ஃபார்ம் பன்ற ஸ்டேஜ்...
ரவி : டேய் நீ ஏன் இப்போ இவ்ளோ பதட்டமா இருக்க.. ஏன் இதெல்லாம் கேட்டுட்டு இருக்க... என்கவும் அர்ஜுன் சரண் மற்றும் ரித்விக்கும் இவர்களிடம் வந்தனர்..
சத்தீஷ் : எனக்கு பதில மட்டும் சொல்லு.. கன்ஃபார்ம் பன்ன எத்தன நாள் எடுக்கும்..
ரவி : அது... அது எப்டியும் 30 டேஸ் ஆனாலே சிம்ப்ட்டம்ஸ் நல்லா தெரிய ஆரம்ச்சிடும் டா.. ஸ்ற்றாங்கான்னு பாத்தா 35 40 டேஸ்க்கு மேல தெரியும்.. என கூறவும் பலவாறு தன்னை தானே குழப்பி கொண்ட சத்தீஷ் அவர்களிடம் எதுவும் கூறாமல் மீண்டும் வீட்டிற்குள்ளே சென்றான்...
இவர்கள் நாழ்வரும் என்ன ஆச்சு என்பதை போல் அவனையே பாக்க ரவி தோளை குலுக்கி விட்டு மற்றவர்களை காண சென்றான்...
தலை வலி பிண்ணி எடுக்க தலையை கைகளால் தாங்கி கொண்ட சத்தீஷ் உடனே தெளிவடைந்து மோகினியின் அறைக்கு ஓடினான்.. ஆனால் அவனுக்கு முன்பே கதவை தட்டலாமா வேண்டாமா என்ற தயத்துடன் விழி பிதுங்கி இந்திரன் நின்றிருந்தான்...
ESTÁS LEYENDO
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasíaஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...