மாயம் - 55

260 28 42
                                    

அண்ணாஸ் அத்தான்ஸ் என ஒருங்கே கேட்ட குரல்களில் மித்ரனும் மிதுனும் சுற்றி நோக்க வைஷு ஓட்டமாய் ஓடி வந்து மிதுனை கட்டி கொண்டு அழவே தொடங்கி இருந்தாள்...

மிதுன் : ஹே வைஷுமா... ஷ் ஷ் அழாத ஒன்னும் இல்ல... நாங்க தான் வந்துட்டோம்ல...

வைஷு : எப்டீண்ணா வந்தீங்க... நம்பவே முடியல... வி மிஸ்ட் யு சோ மச்

மித்ரன் : வி மிஸ்ட் யு டூ குட்டிமா... மொதல்ல அழரத நிறுத்து...

சந்தியா : எப்டிண்ணா இங்க வந்தீங்க.. நாங்க ரொம்ப பயந்துட்டோம் என்றவளை தோளோடு அணைத்து கொண்ட மிதுன்

மிதுன் : ஒன்னும் இல்ல குட்டிமா... இன்னும் ஒரு வாரம் தான்... அப்ரம் எல்லாரும் நம்ம வீட்டுக்கே போய்டலாம்...

மித்ரன் : மொதல்ல அமைதியா உக்காருங்க... ஷ் அப்ரம் இங்கையே விட்டுட்டு போய்டுவோம் என உருட்டி மிரட்டி மெத்தையில் அமர வைத்தவன் அவர்களுள் ஐலா இல்லாததையும் கண்டான்...

மிதுன் : நித்து நீ எங்க போய்ர்ந்தா இந்த நேரத்துல

நித்ரா : தூக்கம் வரலண்ணா அதனால

மிதுன் : அதனால உளாத்த போனியா... எதாவது ஒரு ஜந்து கிட்ட மாட்டிக்கிட்டா என்ன டி பன்னீர்ப்ப என வலிக்காமல் மண்டையில் கொட்ட அதை தேய்த்தவாறு அவனை முறைத்தவள்

நித்ரா : என் ந்யூ ஃப்ரெண் என்ன காப்பாத்துவாங்க நீ மூடு..

மித்ரன் : இங்க வந்தும் வாய் அடங்குதா பாரு .. சரி உங்கள கடத்தீட்டு தான வந்தாங்க... நீங்க என்ன நிம்மதியா படுத்து தூங்கீட்டு இருக்கீங்க..

மதி : அவங்க நல்லா ஜம்போ பெட் குடுத்தா நாங்க சும்மா இருப்போமா... எங்கள காப்பாத்த வேண்டியது உங்க பொருப்பு அத்தான்...சோ நாங்க கூலா தான் இருப்போம்... என மிடுக்காய் கூறி கையை கட்டிக் கொண்டாள்...

மித்ரன் :ஹ்ம் இருந்துட்டாலும் நாங்க தான் உங்கள நெனச்சு அங்க கவலப்பட்டுட்டு இருந்துட்டோம் போல என முனுமுனுத்தவாறு ஓரக்கண்ணால் அவளை ஏற இறங்க நோக்க மதியோ தன் கண்களை உருட்டி அவனை முறைத்தவள் பின் திரும்பி கொண்டாள்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang