மணித்துகள்கள் கரைந்து மணி நேரங்கள் கடந்து கதிரவன் விடியலை தேடி உதித்திருந்தான்..
தன் வயிற்றில் கை வைத்து கொண்டு பொருமையாய் கட்டிலில் இருந்து எழுந்தாள் மது.. அவளருகில் இன்னும் நிரு உறங்கி கொண்டிருக்க.. நிருவை கட்டி கொண்டு கயல் அசந்து உறங்கி கொண்டிருந்தாள்..
தன்னவன் இன்னுமா உறங்க வரவில்லை என அறையை சுற்றி பார்த்த மது பொருமையாய் எழுந்து காலை கடன்களை முடித்து கொண்டு வெளியே சென்றாள்..
அங்கோ இரண்டாம் மாடியின் ஹாலில் இருந்த சோபா ஒன்றில் முகில் சுருங்கி படுத்திருக்க.. அவனருகில் கையை நீட்டி அதில் சாய்ந்தவாறு ரித்விக்கும் அவனுக்கு கீழ் அவன் மடியில் சாய்ந்தவாறு அர்ஜுனும் சோர்வாய் அமர்ந்து உறங்கி கொண்டிருந்தனர்..
ரவியும் சரணும் குறுக்கும் நெடுக்குமாய் கண்களை தேய்த்து கொண்டும் கொட்டாவி விட்டு கொண்டும் அவ்வப்போது தூக்கத்தில் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தனர்...
இவன்களை வித்யாசமாய் பார்த்த மது அவர்களருகில் நடந்து வந்தாள்.. அவளின் கொலுசு சத்தத்தில் திரும்பி பார்த்த ரவி
ரவி : குட் மார்னிங் மதும்மா.. என்னடா இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சிட்ட... என அவளின் கையை பிடித்து அழைத்து சென்று கதிரையில் அமர வைத்தான்...
மது : முளிப்பு வந்துடுச்சுண்ணா.. அது பிரச்சனை இல்ல.. இன்னுமா யாரும் தூங்க போகல...
சரண் : ஹ்ம்.. தூங்கனும் மது..
மது : என்னாச்சு.. ரொம்ப முக்கியமான வேலைன்னு சொன்னியே அண்ணா..
சரண் : ஆல்மோஸ்ட் சக்ஸஸ் தான் பட் என ரவியை பார்க்க
ரவி : ஹ்ம்ம் எங்க முயற்சி முடிஞ்சிடுச்சு... இப்போ அனு திவி ப்ரியா கைல தான் இருக்கு...
நிரு : என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க.. என கண்களை தேய்த்தவாறு தூக்கம் கலையாத முகத்துடன் வெளியே வந்தாள்... அவள் தலையில் செல்லமாய் கொட்டிய சரண்
CZYTASZ
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...