மாயம் (நிறைவுபகுதி - 1)

438 26 174
                                    

மூன்று வாரங்கள் களித்து

அஷ்வித் அந்த படிவத்தில் தன் கையொப்பத்தை இட நந்தினயின் பெயர் அவனின் அருகில் பதிக்கப்பட்டு அவள் முழு மனதுடன் கையெழுத்திட்டதும் அஷ்வித்திற்கு உரியவளானால் நம் சங்கநந்தினி

ஆனந்த கூச்சல்களுடன் கண்ணீரும் அலைகளிக்க அந்த இடமே நம் நாயகர்களின் குடும்பத்தால் ஒரு சில நிமிடங்களுக்கு அவர்களின் வீடாகவே மாறி இருந்தது...

நந்தினி வெட்கத்தால் அஷ்வித்தின் நெஞ்சில் தன் முகத்தை புதைத்து கொள்ள குழந்தையாய் கையில் ஏந்தியவள் இன்று ஒருவனிடம் கை பிடித்து தருமளவு வளர்ந்து விட்டைதை நம் நாயகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை

காலச்சக்கரம் அவர்களை வெகுவாய் வியக்க வைத்தது... அதே நேரம் இந்நொடி அவர்களை பூரிப்படைய வைக்கவும் மறக்கவில்லை... கெனடாவிலிருந்த பெரியவர்கள் ஆறுவரும் வேதபுரம் திரும்பியிருக்க அவர்கள் முதல் நாள் கோவன்களை கண்டு கதறிய கதறல் இன்னும் அனைவரின் மனதிலும் ஒலித்தது...

வனித்தா மற்றும் மாதவன் அவர்களின் மகன்களை கண்டு மனம் நிறைந்து போயிருக்க வனித்தா அழுது அழுது அவரின் மகன்களின் மடியிலே தான் அன்றைய நாளை கிடத்தினார்...

இளவரசிகள் அச்சூழலுடன் அனைவரையும் ஏற்று கொள்ள சற்றே தயங்கினாலும் நம் இரண்டாமணி நாயகிகளின் நச்சரிப்பினால் அவர்கள் விரைவிலே அனைவரையும் ஏற்று கொண்டு சகஜமாகினர்...

யட்சினிகளை எந்த பாகுபாடும் இன்றி திவ்யாவின் சொல் படியே லீலாவதியின் நம்பிக்கையை பாழாக்காமல் பெற்ற மகளை போல் பார்த்து கொண்டனர்...

கல்யாண வைபவங்கள் முடிந்து நம் முதலாம் அணி நாயகர்கள் மன நிறைவுடன் ஒன்றாய் கூடி அமர இரண்டாமணி நாயகர்கள் ஒரு பக்கம் அஷ்வித்தையும் மறு பக்கம் நந்தினியையும் கலாய்த்து கொண்டிருந்தனர்...

அந்த நொடி அவர்கள் அனைவரும் தேடியது ரக்ஷவை  தான்... ஆம் ரக்ஷவ் வேதபுரத்திலிருந்து விடைபெற்று என்றோ அவனின் உரைவிடம் நோக்கி தன் பயணத்தை மீண்டும் தொடங்கியிருந்தான்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora