மாயம் (நிறைவுபகுதி-2)

366 30 60
                                    

எவரின் நேரத்தையாவது வீணடிக்க வைத்திருந்தால் தையை கூர்ந்து மன்னிக்கவும்...
_____________________________________________

அந்த நாளின் இறுதியில் சர்ப்பலோகத்திலிருந்து இன்முகத்துடன் வந்து நின்றான் யோக்யா.. லீலாவதி அவர்களுக்கு கடிதமனுப்பியிருந்தார்...

இவர்கள் பூவுலகம் வந்ததும் சர்ப்பலோகத்தில் பெரும்பாலுமிருந்த குறைகளையும் தீர்த்து இறுதியாய் சாம்பராவை ஆழிலோகத்திலே சர்ப்பலோகத்திலிருந்து அனுப்பும் பரிசாய் அனுப்பி வைத்ததாய் எழுதியிருந்தார்..

தீரா : மொத்தத்துல சாம்பரா ஃப்ரையானாளா இல்ல க்ரேவி ஆனாளான்னு தெரியாமையே போய்டுச்சு.. ஹ்ம்ம்ம்

இரவு வரை அவர்களுடனே இருந்த யோக்யா தன் மகளின் மகிழ்ச்சி இங்கு தான் உள்ளதென்பதை அறிந்ததும் அவளை அழைத்துச் செல்ல வேண்டுமென்ற முடிவுடன் வந்திருந்திருந்த தன் எண்ணத்தை தூக்கியெறிந்திருந்தான்...

அந்த இரவு நேர மதியில் மிளிர்ந்த தன்னவளை அணைத்த படி அமர்ந்திருந்த அஷ்வன்த்தின் முன் யோக்யாவிடம் கதையளந்து கொண்டிருந்த அஷ்வித்தின் இரு தோளிலும் சேவனும் மயூரனும் அமர்ந்திருந்தனர்...

மூவரின் முகத்திலும் கப்பல் மூழ்கிய எக்ஸ்ப்ரஷனே இருக்க யோக்யாவிற்கு தான் சிரிப்பு சிரிப்பாக வந்தது....

யோக்யா : அஷ்வித்.. தமது வதனத்தில் குடியிருக்கும் உணர்ச்சிக்கு எந்த கப்பல் மூழ்கியது காரணம் என கேட்க முதலில் இதை கேட்டு அஷ்வித் பேந்த பேந்த முளிக்க அதை புரிந்து கொண்டு சிரிக்கத் தொடங்கிய பவியை திரும்பி பார்த்து முறைத்தான்...

அஷ்வன்த் : டேய் மகனே என் பொண்டாட்டிய ரொம்ப முறைக்காத டா என அவன் முகத்தை திருப்பி விட

அஷ்வித் : யப்பா.. உங்களுக்கே இது அநியாயமா இல்ல... நானே இங்க என் வருங்கால பொண்டாட்டிய பாக்க விட மாற்றீங்கன்னு கவலைல இருக்கேன்.. நீங்க ரொமேன்ஸ் பன்னீட்டு இருக்கீங்க...

அஷ்வன்த் : இதெல்லாம் ரொமேன்ஸுன்னு சொல்லாத போடா...

அஷ்வித் : மா உன் பையனுக்கு கொஞ்சமாச்சும் கருணை காட்டும்மா...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin