மாயம் - 69

276 29 50
                                    

சித்தார்த் அந்த இரவு நேர வாணத்தை வெறித்த படி கோட்டையின் மதிலில் அமர்ந்திருந்தான்.. அவனின் சிகப்பு கண்கள் என்றுமில்லாது ஒரு வகையான தவிப்பு கலந்து காணப்பட்டது...

அவன் மூளைக்குள் சித்ரியாவின் வார்த்தைகளே ரிங்காரமிட அந்த நேரம் சரியாக ஒரு சத்தம் கேட்டு திசை திரும்பினான்...

மீண்டும் நித்யா ஒரு சுடர் விளக்குடன் மூன்றாம் மாடியை நோக்கி சென்று கொண்டிருந்தாள்... அதை கண்டவனுக்கு அவளை பற்றி அறிந்து கொள்ள ஆவல் எழவில்லை அதற்கு பதில் அவள் கண்களை பார்க்க வேண்டுமென எண்ணினான்...

அந்த மூன்றாம் மாடியின் வளாகம் என்றும் போல் துஷ்ரந்களால் நிறம்பியிருக்க தன்னை தயார் படுத்தி கொண்டு நகர எத்தனித்தவளை சட்டென ஒரு கரம் வெளியே பிடித்திழுத்தது...

காற்று கேசத்தை கிளிக்க கண்களை திறந்தவள் நிலவின் ஒளியில் மின்னிய செந்நிற இறெக்கையை கண்டு நேராக செண்ணிற விழிகளை நோக்கியதில் சமைந்து நின்றாள்...

சித்தார்த் : எங்ஙனம் செல்ல வேண்டுமென கூறினால் அங்ஙனம் தரையிறங்க இருக்கிறேன் தேவி.. என இவன் அவளின் கண்களை நேருக்கு நேர் கண்டவாறு கூறவும் அவள் இமைகளை இமைத்து

நித்யா : மூ..மூன்..றாம் மா..டியி...ன் மறு..மு..ணை.. என்க சரியாக இருவரும் இப்போது அங்கு நின்றிருந்தனர்..

சித்தார்த் : பல முறை அறையை விட்டு வெளியேறும் பழக்கமிருந்தாலும் தமக்கு தம்முடைய பாதுகாப்பை எண்ணி அக்கரை இருக்க வேண்டும் தேவி.. என்றும் எம்மால் தம்மை கண்காணிக்க இயலாதல்லவா...

நித்யா : பின் காக்க இயலுமா என சட்டென இவள் கேட்க இதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை...

சித்தார்த் : இன்னலில் சிக்கித்தவிக்கும் உயிரை காப்பதே எமது பொருப்பாகும்.. ஆதலின் அதை தயங்காது புரிவேன்

நித்யா அதற்கு எதுவும் கூறாமல் விரக்தியாய் ஒரு புன்னகையை சிந்தினாள்.. அந்த புன்னகை அவளே அறியாது அவன் மனதை தைக்க அவளின் கண்கள் இன்றும் அவனிடம் ஏதோ கூற முயன்றது... சுலபமாய் அவள் மனதையே படிக்க தெரிந்திருந்தவனுக்கு அவள் ஊதா திற கண்களை நோக்குகைகில் அது எளிதாய் தெரியவில்லை... கண்ணீர் கோர்க்க தொடங்கியதை உணர்ந்து அவனது விழிகளில் இருந்து தன் விழிகளை பிரித்து கொண்டாள் நித்யா

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora