சில நிமிடங்கள் முன்...
நாயகன்கள் அனைவரும் மடிந்தமர்ந்த வேளை கதிரவன் முழுதாய் மண்ணிற்குள் பதுங்கியிருந்தான்... இரத்தக்கிளறியாய் இருந்த அமைச்சன்கள் நாயகன்களை இந்நிலையிலே கொல்ல முயற்சிக்கும் முன் யாளி வீராங்கனைகள் மகன்களின் அரணாய் எதிர்த்து வர இவர்களை எதிர்த்து தாம் இருக்கும் நிலையில் நிச்சயம் யுத்தமிட இயலாதென்பதை உணர்ந்திருந்த அமைச்சன்கள் கோட்டைக்குள் விரைந்தனர்...
வீனா அவர்கள் செல்வதை கண்டு தடுக்கும் எண்ணத்தில் அவளது வாளை இங்கிருந்தே இறுதியாய் சென்று கொண்டிருந்த சாகாரகாந்தனை குறி வைத்து தூக்கி எறிய அது தவறுதலாய் சாகாரகாந்தனின் முதுகில் சரெக்கென குத்திய நொடி இரண்டு சாகாரகாந்தனும் ஒன்றிணைந்தனர்...
தன் தாக்குதல் அவனை நிற்க வைத்ததை கண்டு வீனா ஓரடி எடுத்து வைக்கும் முன் சாகாரகாந்தனை வலுக்கட்டாயமாய் மற்ற நாழ்வர் உள்ளே இழுத்துச் செல்ல அந்த இரும்பு கதவு தடாளென அடைத்து கொண்டது
அனைத்தும் முடிந்து விட்டதென யாளி வீராங்கனைகள் மண்ணில் வீழ்ந்திருந்த மகன் மருமகன்களை கண்டு கதறினர்... எவ்வளவோ போராடியும் இவர்கள் போரினை வெல்ல முடியவில்லை என எண்ண போரின் முடிவே இதுவல்ல என உணர்த்துவதை போல் மூச்சு வாங்க அங்கே வந்து சேர்ந்தனர் சஹாத்தியசூரர்களும் நாகனிகளும்...
மோகினி குத்துயிரும் குழையுயிருமாய் மூச்சு விட இயலாமல் கீழே கிடந்த ராமை எழுப்ப கண்ணீருடன் போராடி கொண்டிருந்தாள்... ஆனால் அவளது எந்த முயற்சிக்கும் ராம் ஒத்துழைக்கவில்லை...
மருண்ட நிலை நீடிக்கையில் என்ன செய்வதென தெரியாமல் அனைவரும் தவிக்க நாயகன்கள் தனிச்சையாக எழுந்து கொண்டனர் ஆனால் அவர்களின் நிலையை கண்டால் நிற்க கூட இயலாமல் அவர்கள் முயல்வதாய் தான் தெரிந்தது... முன்பு தைரியமளித்து அனைவரையும் முன்னேற்றிய முதலாம் நாயகிகளுக்கும் இப்போது நம்பிக்கை மெதுமெதுவாய் குறைந்து கொண்டிருக்க யாவரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மண் நிலத்தில் பரந்து விரிந்திருந்த காற்றில் மாற்றம் ஏற்பட்டு அதன் வேகம் கூடியது...
VOCÊ ESTÁ LENDO
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasiaஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...