க்ரிஷ் தன் கரங்களிலே சரிந்த அனுவை பதட்டத்துடன் பிடித்த அடுத்த நொடி அவனுக்குள் ஒரு உணர்வு ஊடுருவி இதயத்தை தொட்டு வர கண்கள் ஒரு நொடிக்கும் குறைவான இடைவேளையில் அவனது சிகப்பு நிற இரத்தினக்கல்லாய் பளபளத்து விட்டு பழைய நிலைக்கு திரும்பியது...
தன் அதிர்ச்சியை ஓரங்கட்டிய க்ரிஷ் உடனே அனுவை தூக்கி கொண்டே உள்ளே ஓடி வர.. இவன் உள்ளே கால் வைத்த அடுத்த நொடியே மாடியிலிருந்து " ஷிவானி என்ன பாரு டி.. " என்ற இந்திரனின் அலரல் வீட்டை நிறைக்க அதே நேரம் வீட்டின் வெளியிலிருந்து " வீனா ரக்ஷா தான்யா யாராவது வாங்க... தேவி மயங்கீட்டா " என்ற சத்தீஷின் அலரல் வீட்டுள் நுழைந்தது...
தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் சிந்திக்க நேரமில்லை என்பதை உணர்ந்திருந்த க்ரிஷ் உடனே அனுவை சோபாவில் கிடத்தி விட்டு வேகவேகமாய் உணவு மேஜையிலிருந்த தண்ணீர் ஜெக்கை எடுத்து கொண்டு ஓடி வந்தான்... அதற்கு முன்னமே உணவு பலகாரங்களை சமையலறைக்குள் வைத்து விட்டு வந்த வீனா க்ரிஷ் மயங்கிய அனுவை சோபாவில் கிடத்தி விட்டு பதட்டத்துடன் செல்வதை கண்டு உடனே அவளை பரிசோதிக்க ஓடியிருந்தாள்...
அதே போல் மாடியில் மதுவிற்கு மலர் எடுத்து சென்றிருந்த ரக்ஷா இந்திரனின் அலரலில் அவனிடம் ஓடி உடனே திவ்யாவை பரிசோதித்தாள்... அறையில் மதுவை அலங்கரித்து கொண்டிருந்த பவி வர்ஷியும் அவளுடனே ஓடி வந்தனர்...
கீழே கொள்ளை புற வாயிலில் உணவை கிண்டி கொண்டிருந்த தான்யா சத்தீஷின் அழைப்பினால் அவனிடம் ஓடி மயங்கி கிடந்த ப்ரியாவையும் அவளை பதட்டத்துடன் எழுப்ப முயன்று கொண்டிருந்த சத்தீஷையும் கண்டு அவர்களை அனுகினாள்...
தோரணங்களை கட்டி கொண்டிருந்த ரனீஷ் ரித்விக்கும் பதறியடித்து உள்ளே ஓடி வர சத்தீஷிடமோ வெளியே பந்தல் வேலையை பார்த்து கொண்டிருந்த முகிலும் சரணும் ஓடினர்...
அனு திவ்யா ப்ரியா மூவரின் மணிக்கட்டையும் பிடித்து பார்த்த வீனா ரக்ஷா தான்யா ஒரே நேரத்தில் ஒரு சேர " நம்ம வீட்டுக்கு இன்னோறு பாப்பா வர போகுது " என கத்தினர்...
KAMU SEDANG MEMBACA
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasiஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...