மாயம் - 67

314 25 70
                                    

சர்ப்பலோகம்

நடந்த அனைத்தையும் கூறி விட்டு ருத்ராக்ஷ் அமைதி காக்க இளவரசிகள் தான் உண்மையில் கோவன்களின் மகவுகளென அறிந்ததும் பாதி அதிர்ச்சியும் மீதி மகிழ்ச்சியுமென அனைவரும் நின்றிருந்தனர்...

சித்தார்த் : எங்க இளவல நீ எப்போலேந்து காதலிக்கிர துருவா... என அனைவரின் அடுத்த கேள்வியை முதலிலே முன் வைக்க

துருவ் : ஒரு ஏழு வர்ஷமா டா...

ருமேஷ் விதுஷ் : ஏதெ ஏழு வர்ஷமாவா... என ஒரு சேர கத்தினர்

அஜய் : அதுக்கு ஏன் டா இந்த கத்து கத்துரீங்க...

கார்த்திக் : ஏன் மச்சான் உன் லவ் மட்டர் உன் தொம்பிகளுக்கு தெரியாதா என்ன...

மித்ரன் : அப்போ உனக்கும் தெரியுமா

கார்த்திக் : தெரியும் டா.. ஆனா துருவ் காதலாக்கிர சித்ரியா தான் இந்த சித்ரியான்னு எனக்கு தெரியாது...

வருண் : டேய் ஞானப்பழமாட்டம் இருந்துட்டு ஏழு வர்ஷம் காதலிச்சேன்ங்குர.. ஒன் சைட் லவ்வா

துருவ் : நா எப்போ டா சிங்கிலா இருக்கேன்னு சொன்னேன்... நீங்களா நெனச்சிக்கிட்டா நா என்ன பன்ன முடியும்... இல்ல இரு தலை காதல் தான்...

ஆதியன்த் : எங்க தங்கச்சி சீக்கிரம் உன் கிட்ட கௌந்துட்டா போலையே டா... என நெஞ்சில் கை வைத்து கேட்க

துருவ் : ம்க்கும் கௌந்ததே நான் தான் டா என பழைய நினைவுகளை நினைத்தபடி கூறிட அனைவரும் இப்போதும் ஆச்சர்யத்துடன் அவனை நோக்கினர்...

துருவ் நடந்ததை கூற தொடங்கினான்...

ஏழு வருடத்திற்கு முன்பு கயலை காப்பாற்ற வந்ததற்கு பின் அன்றே சர்ப்பலோகத்திற்கு வந்திருந்தான்... வளரி பாட்டியை கண்டுப்பிடிப்பதற்காக... ருமேஷ் மற்றும் விதுஷ் அப்போது பதினெட்டு வயது ஆடவன்களே என்பதால் பொருப்பு அவர்களுக்கு மூத்தவனான இருவத்தியோறு வயது துருவனிடம் சென்றது..

அதை மறுக்காமல் ஏற்று ஆழிலோகம் வாயிலாக சர்ப்பலோகத்தை அடைந்த துருவை முதலில் கண்டது ஆழிலோக ஆழி கடலும் சர்ப்பலோக நிலமும் ஒன்றிணையும் நிலத்தருகில் நின்றிருந்த பதினைந்து வயது சித்ரியா..

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang