தன் முன் நிற்பது க்ரிஷ் தானா இல்லை வேறு எவருமா என்ற சந்தேகத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவாறு இருந்தான் சேவன்...
கோட்டைக்குள் குழப்பமாய் சுற்றி கொண்டிருந்த சேவன் திடீரென கேட்ட சேவன் என்ற அழைப்பில் திரும்பி பார்த்தான்... நீலி மிகவும் தீவிரமாய் விளையாடி கொண்டிருந்ததால் சேவனை கவனிக்க தவற அவனோ " தான் கேட்டது உண்மையில் அக்குரல் தானா... எங்கோ செவி சாய்த்த குரல் போலே இருந்ததே " என சிந்திக்க சட்டென அவன் முன் வந்து மிதந்தது ஒரு கருங்கல்...
அதை கண்டு திடுக்கிட்ட சேவன் கண்களை விரித்து விழிக்க சில நொடிகளில் அது எரிந்து சாம்பலாய் காற்றில் கரையவும் " உம் வரவிற்காய் வெகு நாழி காத்திருக்கிறேன்.. தையை கூர்ந்து வரவும் " என்ற வாக்கியம் காட்சி கொண்டு காற்றோடு மறைந்தது...
சேவன் : இது ஒற்றற்கலையல்லவா என கத்தி கொண்டே எழுந்தவனை
நீலி : என் நேர்ந்தது சேவா என நீலி குழப்பமாய் பார்க்க...
சேவன் : நீலி எமக்கு அனல் கோவனிடமிருந்து தூது வந்துள்ளது... அவர் எம்மை அழைக்கிறார் யான் சென்று வருகிறேன் என உடனே அருகிலிருந்த யாளி மீது ஏறி அதன் தும்பிக்கை வழியே கீழே சருக்கி கொண்டு வெகு சீக்கிரமாய் இறங்கி ஓடினான்...
நீலி : என்(ன) கூறவருகிறாய் சேவா.. அனல்கோவன் தானென நீ எவ்வாறு அறிவாய்... என கத்தி கேட்க...
சேவன் : ஒற்றற்கலை தீ சுடராய் வந்திருப்பின் அது அனல் கோவனின் அடையாளமே என ஓடி கொண்டே கத்தினான்... அதெங்கு நீலிக்கு கேட்டிருக்க போகிறது ...
வெளியே ஓடொடி வந்த சேவன் உடனே சிந்திக்காமல் தன் சக்திகளை உபயோகித்து அடர்ந்த கானகத்தினுள்(காட்டிறுகுள்) நுழைந்தான்...
அரை மணி நேரம் பின் ஏதோ ஒரு சத்தத்தில் சட்டென திரும்பினான்... அவனுக்கு சில அடி தூரங்களில் சித்தார்த் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தான்...
அவனை கண்டதும் இருளிள் " அனல் கோவனே " என சேவன் சந்தோஷமிகுதியில் கத்தி விட சேவன் இமை மூடி திறக்கும் நொடி பொழுதில் வேகமாய் ஏதோ ஒன்று அவனை கிடத்தி அவ்விடத்தை விட்டு மறைந்திருக்க இப்போது இவன் முன் அமர்ந்திருக்கிறான்...
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...