(முதலில் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்.. இக்கதையில் பல கதாபாத்திரங்கள் உள்ளதே தங்கள் அனைவருக்கும் பல குழப்பங்களை தருகிறது.. இருந்தும் இன்னும் கதையில் ஆறுவர் அறிமுகமாகவில்லை என்பதே உண்மை.. மூவர் அறிமுகப்பட வேண்டியவர்கள்... தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்.. எத்தனையோ கோணங்களில் சிந்தித்து விட்டேன்... இந்த ஆறுவரில் அறிமுகமாகும் மற்ற மூவர் சாதாரண பெண்களின் கதாபாத்திரங்கள்... சாதாரண பெண்களாய் இருந்தாலும் அவர்களின் கதாபாத்திரமும் முக்கியத்துவமும் இக்கதையில் அவசியமானது.. எனது நிலையை புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.. அப்படி புது கதாபாத்திரங்கள் வேண்டாமென எண்ணினீர்கள் என்றால் தயங்காமல் தெரிவியுங்கள்.. அதில் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை... அப்படி புதிய கதாபாத்திரங்கள் வேண்டாமென்ற கருத்திற்கு அதிக வாசகர்கள் விருப்பப்பட்டால் ஏற்கனவே இருக்கும் கதாபாத்திரங்களை மெல்ல மெல்ல கதையிலிருந்து நீக்கி விடுவேன்.. இறுதியில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் இடம்பெறுவர்.. நன்றி)
இரண்டு நாட்கள் கடந்து விட்டது...
வீட்டில் தன் தாய்களுடன் இருக்கும் நாயகிகளுக்கு இன்னமும் அதிர்ச்சி மீளவில்லை... ஏனெனில் அவர்கள் வீட்டை அடையும் போது நாயகிகள் அவர்களை சிறு அதிர்ச்சியுடனே அன்பாகவே வறவேற்றனர்... எதுவும் கடிந்து கொள்ளவில்லை... அதுவே இவர்களுக்கு சற்று நிம்மதியாய் இருக்க அவர்கள் முகத்தில் இருந்த ஒரு தீவிரத்தை கவனிக்க தவறினர்...
சோம்பல் முறித்து எழுந்து வந்த வைஷு கொட்டாவி விட்டவாறே கண்களை தேய்த்து கொண்டே வந்தவள் அவளை ஏதோ ஒரு கண்கள் அதிக நேரமாய் உருத்து நோக்குவதை போல் உணர்வெழ தூக்கம் பறந்து விழி விரித்து சுற்றி நோக்கினாள்...
அவளுக்கு நேரெதிரே இருந்த வாயிலின் முன் தன்னை உலுக்கு உலுக்கென உலுக்கியும் அதை சற்றும் கவனியாமல் தூங்கி எழுந்து வந்த தன் கனவுதேவதையை வாயை மூட மறந்து இமைக்காது பார்த்து கொண்டு நின்றிருந்தான் நம் வருண்...
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...