மாயம் - 66

305 28 98
                                    

துருவ் : நாழிகளாகிவிட்டது சித்ரியா.. யான் சென்றாக வேண்டும்..

சித்ரியா : ஹ்ம் தாம் எம்மை காண பல வருடம் களித்து இன்று தான் வந்துள்ளீர்.. தற்போதும் விரைவில் சென்றாக வேண்டுமா...

துருவ் : ஆம் சித்ரியா.. உம்மை யானறிவேன் என உமது சகோதரர்கள் கூட அறியவில்லையடா.. அனைத்து இன்னல்களும் முடிவடையும் வரை நம்மிருவருடைய காதலை பற்றி வெளிப்படுத்துவது சரியல்ல எனவே உள்ளுகிறேன் (நினைக்கிறேன்)

சித்ரியா : ம்ச் சென்றாக வேண்டுமென்பதற்கா இவ்வளவு விளக்கம்..

துருவ் : பின்ன என்னவள் அவளவன் மீது சினமுற இயலாத அளவு யானும் முயல வேண்டுமல்லோ

சித்ரியா : சரி தான்.. ஆயினும் எம்மை பற்றிய மெய்யை யமது தமையர்களிடம் எவ்வாறு பறைய உள்ளீர்கள் என நிமிர்ந்து கேட்க

துருவ் : அறியேனம்மா.. ஆனால் அனைவரிடமும் விரைவிலே பறைய வேண்டும்.. நீவிர் (நீ) மெய்யையும் அன்று பிறையீரா கூறியதாலே அறிந்து கொண்டாய்... அல்லவே உம்முடனும் இம்மெய்யை யான் பறைந்திருக்க மாட்டேன்

சித்ரியா : தாம் எவரிடமும் இதை பற்றி பறையாததன் மெய் காரணம் யாது ஐயனே

துருவ் : மெய்யென கூறினால் யான் சற்றே குழப்பத்தில் உள்ளேன் சித்ரியா.. திடீரென தாம் மூவரும் இன்னமும் உயிருடன் உள்ளீர் என்பதை கூறினால் நம்பவோ தம்மை ஏற்றுக்கொள்ளவோ நிச்சயம் நம் குடும்பத்தார் தயங்க மாட்டர்.. ஆயினும் ஏதோ ஒன்று தம்மை பற்றிய மெய்யை வெளிக்கொணர எம்மை தடுத்துக் கொண்டே இருக்கிறது

சித்ரியா : யம்மை பற்றிய மெய்யை தாம் எப்போழ்தறிந்தீர்...

துருவ் : மெய்யாக கூற வேண்டுமெனில் சில நாட்கள் முன்பு தான் அறிந்தேன்.. சேவன் பிறையிடம் தம்மூவரை பற்றி உரையாடும் பொழுது

சித்ரியா : ஹான்.. அவ்வாறெனில் யாம் காதலிக்க தொடங்கியதிலிருந்து தாம் அறியவில்லையா

துருவ் : ஏழாண்டுகளாய் எந்த ஒரு மெய்யையும் எம்மால் அறிய இயலவில்லை அன்பே.. அதை யான் பெரிதெனவும் எண்ணியதில்லை.. ஆயின் நீர் என் மாமன் மகளென அறிந்ததும் யாமடைந்த மகிழ்ச்சிக்கு இன்னமும் அளவில்லை...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora