அனு அவள் இமைகளை மூடி மனதை ஒரு நிலை படுத்தி துருவை அழைத்தாள்.. தன் நாக சக்தி மூலமாக அவளது குரலை கேட்ட துருவன் பதிலளித்தான்...
திடீரென பேசி கொண்டிருந்தவன் அத்த என்கவும் அனைவரும் அவனை நோக்க துருவின் கண்களோ தங்கமும் பலுபும் கலந்த நிறத்தில் அழகாய் மின்னி கொண்டிருந்தது
துருவ் : அத்த
அனு : துருவ் கண்ணா அங்க எதாவது பிரச்சனையா
துருவ் : இல்ல அத்த.. இங்க எதுவும் பிரச்சனை இல்லை
அனு : எப்போ நீங்க சர்ப்பலோகம் போனீங்க
துருவ் : நேத்து அந்தி சாயிரதுக்குள்ளையே வந்துட்டோம்
அனு : இப்போ அங்க நேரம் இப்போ விடிஞ்சு ஒரு நாழு மணி நேரம் இருக்கும் இல்லையா
துருவ் : ஆ..ஆமா அத்த
அனு : நீங்க எங்க இருக்கீங்க...
துருவ் : எங்களுக்கு யோக்யா உதவி செஞ்சான் என்கவும் அனு யோக்யாவின் பெயரை கேட்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தாள்...
அனு : யோக்யா தமையனா
துருவ் : ஆமா அத்த.. யோக்யா தான் சர்ப்பலோக கோட்டையோட சேனை தலைவன்.. நானே எதிர்பார்க்கல
அனு : ஹ்ம் சரி துரு .. நேத்துலேந்து என்ன செஞ்சீங்க
துருவ் : கோட்டைக்கு போனோம் அத்த
அனு : அங்க என்ன ஆச்ச
துருவ் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் விவரிக்க சித்தார்த் கட்டுப்பாட்டை இழந்து வெறி பிடித்த நேரமும் இங்கு சிம்மயாளிகள் வெறி பிடித்து உறும தொடங்கிய நேரமும் ஒரே காலம் தான் என்பதை ப்ரியாவும் தலையசைத்து அமோதித்தாள்...
துருவ் : ஏன் அத்த இதெல்லாம் கேக்குறீங்க
அனு : ஒன்னும் இல்ல கண்ணா.. நீங்க ஜாக்கிரதையா இருங்க சித்துவ அவன் போக்குலையே விடுங்க..
துருவ் : ச..சரி அத்த என அவனை தனியே விட வேண்டுமா என்ற தயக்கத்துடன் துருவ் கூற
ŞİMDİ OKUDUĞUN
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantastikஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...