கயல் : நம்மள எதுக்கு டி இப்போ அங்க வரனும்னு சொல்றானுங்க...
மதி : எதாவது புது ப்லனா இருக்குமா...
மாயா : இல்லனா எதாவது யாகம் பன்ன போறாங்களா
வைஷ்ணவி : ஒருவேளை புதுசா யாரையாவது சித்திரவதை பன்னுவாங்களா
இக்ஷி : நாம போகாம இருந்தா என்ன நடக்கும்...
நந்தினி : யட்சினிகள இப்போ நமக்கு காட்டுவாங்களா
நித்ரா : நமக்கு தப்பிக்க வழி இருக்குமா...
நவ்யா : அன்னைக்கு கயல் கைய அறுத்த மாரி நம்மள்ள இன்னோறு ஒருத்தர் கைய அறுக்க போறானுங்களோ... என ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளை பரபரப்பாய் அடுக்க
சந்தியா : ஜஸ்ட் காம் டௌன் கெர்ள்ஸ்.. ஏன் இப்போ பறக்குறீங்க என நிதானமாய் கேட்டு அனைவரையும் அவளின் புறம் திருப்பினாள்...
நவ்யா : ஏன் டி உனக்கு பதட்டமா இல்ல...
சந்தியா : இருக்கு தான்... பட் நாம பயந்தா மட்டும் என்ன ஆகீட போகுது... இத நெகட்டிவாவே பாக்காம கொஞ்சம் பாசிட்டிவா பாப்போமே என்றதும் என்ன சொல்ல வர என்பதை போல் மற்றவர்கள் இவளை ஏறிட்டனர்..
நித்ரா : இதுல பாசிட்டிவா பாக்க என்ன இருக்கு சந்து...
சந்தியா : இருக்கு டி.. அந்த அரசவை இரவு உணவுக்கு அப்ரம் தான் நடக்க போறதா பத்யரூனா சொன்னாங்க... சோ எப்டியும் நடு இராத்திர வர நடக்கும்.. அதுக்கு நாமளும் இந்த அறைய விட்டு வெளியேறலாம்... அப்போ எல்லாரும் பிசியா தான் இருப்பாங்க... பணியாட்களும் நம்ம சித்ரி வேதி எழில தவிர்த்து வேற யாரும் இருக்க மாட்டாங்க... அப்போ நாம யட்சினிகள தேடலாம் இல்ல..
கயல் : வேஸ்ட் ஆஃப் டைம் சந்து.. அது முடியவே முடியாது.. நம்மளையே அங்க இருக்கனும்னு சொல்லீர்க்காங்கன்னா யட்சினிகளும் அங்க தான் இருப்பாங்க... நேர்லையே நாம பாத்துடலாம்...
மாயா : இட்ஸ் ஓக்கே.. எதுக்கு நாம டைம வேஸ்ட் பன்னனும்.. அந்த நேத்துல இந்த கோட்டைய விட்டு தப்பிக்க நாம வழி தேடலாம்... என தெளிவாய் கூறினாள்...
BINABASA MO ANG
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...