மாயம் -7

543 34 169
                                    

விரல் நீட்டி தொடும் தூரத்தில் கிளை இருந்தாலும் அதை தொட்டால் எங்கு கிளை முறிந்து விடுமோ என்ற பயத்தில் தொங்கி கொண்டிருந்த ஒரு பறவையை ஜன்னல் வழியே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி... அவளருகிலே தூரிகையினால் அந்த செவ்வாணத்தின் படத்தினை அழகான ஓவியமாய் தீட்டி கொண்டிருந்தாள் மாயா...

அவளின் கை வண்ணத்தின் அழகு ஓவியத்தினில் பிரதிபலிக்க கன்னாடி பிம்பமென தெரிந்த அவ்வோயியத்தை தன்னையும் மறந்து இரசித்து கொண்டிருந்தாள் இக்ஷி...

விடிந்ததிலிருந்தே மனம் சஞ்சலத்தில் அலைய மன நிம்மதிக்காய் ஓவியம் தீட்ட துடங்கிய மாயாவின் கை அவள் எண்ணத்திற்கேற்ப அழகாய் உருவாகி கொண்டிருந்தது...

இமை மூடி வரைந்து கொண்டிருந்தவளின் மனம் திடீரென நெருட தொடங்க, சீராய் சென்ற தூரிகை தடுமாறியது அவளின் கட்டுப்பாட்டை விட்டு கைகள் தனிச்சையாய் எதையோ கிருக்க... இமையை கூட திறக்காமல் நிற்பவளையே ஆரம்பத்திலிருந்து ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்த மதி இவள் திடீரென புருத்தையும் இதழையும் சுருக்குவதையும் கண்டு குழப்பமடைந்தாள்...

மாயாவின் இயற்கை ஓவியம் திடீரென மாறுவதை கண்டு இவ்வளவு நேரமும் அதை இரசித்து கொண்டிருந்த இக்ஷியும் பதறி போய் அவளை பார்த்தாள்... தன் கட்டுப்பாட்டை மொத்தமாய் இழதிருந்த மாயா தூரிகையை தவிர்த்து கையிலிருந்த அனைத்தையும் தூக்கி எறிந்ததோடு மறுகையால் எதையெதையோ தள்ளி விட்டாள்...

இக்ஷி : ஹே மாயா... என கத்தவும் இவளின் கத்தலில் கீழிருந்த அனைவரும் மேலே ஓடி வந்தனர்... நந்தினி பயத்தில் உடல் நடுங்க இமையை பிரித்திடாமல் நின்ற மாயாவை தோள் தொட்டு திருப்ப முயன்றாள்...

அவளின் தொடுகையில் சட்டென கண்களை திறந்த மாயா... பெருமூச்சை வாங்கியவாறு சட்டென சாய... அவளை பிடித்து பெட்டில் அமர வைத்தாள் சந்தியா...

வைஷு : என்ன டி ஆச்சு... ஏன் டி இந்த கத்து கத்துன... என பறபறக்க...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora