மாயம் - 70

287 30 25
                                    

இரத்தக்களமாய் மாறி கொண்டிருந்த அந்த போர்களத்தில் காணும் இடமெங்கிலும் குருதிப்புனலே காட்சி தந்தது... நாகமனிதர்கள் சிலர் துண்டு துண்டாய் மரணித்து வீழ்ந்திருந்தனர்... சில இடங்களில் யாவும் நீல நிற திரவங்கள் கொட்டி சிகப்பு இரத்தத்தோடு ஆறாய் ஓடி கொண்ருந்தது...

யானையாளிகள் சதக் சதக்கென கண்ணிற்கெட்டா அந்த துஷ்ரந்களை மிதித்து சல்லடையாக்க நிலம் மெல்ல நீல இரத்தத்தால் சாயம் பூச பட்டது...

அந்த ஐந்து அமைச்சன்களும் சஹாத்திய சூரர்களும் சற்றும் விட்டு கொடுக்காமல் போரிட்டு கொண்டிருந்தனர்...

உடலில் வாளின் கீறல்களால் உண்டான காயங்களில் இரத்தம் கசிவதை ஒருவரும் கண்டதாய் தெரியவில்லை...

சரணின் முன் பெருமூச்சு விட்டபடி நின்ற மகரகாந்தன் அவன் வாளை மறு கரத்தில் பிடித்து சரணை முறைத்தபடியே சரணின் மீது பாய அவன் தாக்குதலை தட்டி சரண் நகரவும் சட்டென அவனுள்ளிருந்து இரண்டாம் மகரகாந்தன் வெளிப்பட்டான்..

இதை எதிர்பார்க்காத சரண் சுதாரிக்கும் முன் சரண் நகர்ந்த அப்பகுதியில் குதித்த இரண்டாம் மகரகாந்தன் சரணின் முதுகில் வாளால் கீறினான்...

முன் நின்றிருந்த மகரகாந்தன் சரணை நோக்கி தன் வாளின் பிடியை இரு கைகளாலும் உயர்த்தி குத்த முயல அதற்குள் சரண் தன் முதுகின் வலியை பொருட்படுத்தாது மண்ணில் விழவும் முதலாம் மகரகாந்தனின் குறி தப்பிவிட இரண்டாம் மகரகாந்தன் அவன் வாளை மீண்டும் சரணை நோக்கி பாய்ச்சும் முன் ஒரு கருநீல பந்து அவனை சீரி வந்து தாக்கியது...

முதலாம் மகரகாந்தன் அவனது வாளை மீண்டும் சரண் மீது அழுத்த அதை தன் வாளை குறுக்கே விட்டு தடுத்த சரண் வேகமாய் உயர்த்திய காலால் அவனை உதைத்து தள்ளி விட்டு கீழிருந்த காலை மடக்கி எம்பி எழுந்து நின்றவனின் அருகிலே மேலிருந்து அனு குதித்தாள்....

அனு : இந்த இரண்டாமவனை யான் கவனித்து கொள்கிறேன் தமையா என கண்களில் கருநீல ஒளி சுடர்விட்டெறிய கூறியவள் சரண் தலையசைத்ததும் அவளது உரையிலிருந்து கண்கள் கூசும் ஒளியுடன் மிளிர்ந்த அவளது அற்புத வாளை உருவினாள்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz