மாயா சென்ற திசையில் ஓடிய ஆதவ் ஒரு வளைவில் மாயா எங்கோ செல்வதை கண்டு அவள் கரத்தை பிடித்து சட்டென இழுத்தான்...
அந்த இழுப்பை எதிர்பார்த்திடா மாயா பூக்குவியலென ஆதவ் மீது விழுந்தாள்... அவள் இடையை இரு கரங்களால் பிடித்தவன் அவளை நோக்க இருவரின் வதனங்களும் நேருக்கு நேர் இருக்க மாயாவின் கண்மணிகள் தீவிரமாய் எங்கோ சுழன்றடித்தது...
ஆதவின் கண்கள் அவளை கண்டதில் பரம ஆனந்தத்தை வெளி காட்ட அடுத்த நொடியே அவன் பிடியிலிருந்து எவரோ மாயாவை இழுக்கும் உணர்வு பெற்றவனின் கரங்கள் தனிச்சையாகவே அவளை அவனோடு சேர்த்து இறுக்கியது...
மாயா தடுமாறி அவனோடு ஒன்றி நிற்க அவளின் இரு கரங்களும் அவனின் கோதுமை நிற சட்டையை இறுக்கி பிடித்திருந்தன...
இதழ் படபடக்க கண்கள் சிறகடிக்க தன்னையே விழி அகற்றாது நோக்கியவளை காண காண ஆதவினுள் ஏதோ உடைந்தெறியும் உணர்வு எழுந்து கொண்டே இருந்தது...
அவன் மனம் எதையோ அவளிடம் இந்நொடியில் கூறி விட வேண்டுமென துடிக்க பாழாப்போன அந்நேரத்தில் அது என்னவென்று துளியும் சித்தத்தில் எட்டவில்லை...
நொடிக்கு நொடி ஆதவின் இறுக்கம் மாயாவை அவனோடு மேலும் மேலும் நெருக்க அவளோ தன் மதியை இழந்து அவனை பிரிந்து செல்ல முயன்று கொண்டிருந்தாள்...
கண்ணிற்கெட்டா விசை ஒன்று மாயாவை தன்னிடமிருந்து பிரிப்பதை கண்ட ஆதவ் அவளை தன் ஒட்டு மொத்த சக்தியும் கொடுத்து முன் வர வைத்து இவன் இப்புறம் திரும்பிட ஆதவ் எதிர்பாரா நேரம் அவனுக்கும் முன் இன்னுமோறு விசை மாயாவை இழுக்க இப்போது ஆதவும் எதனாலோ பலமாய் இழுக்கப்பட்டான்...
எவ்வளவோ முயன்றும் ஆதவின் முயற்சிகள் பயனின்றி செயலிழக்க மாயா அவனை விட்டு பிரிந்த அடுத்த நொடி அவன் மையு என கத்தி கொண்டே பின் தூக்கி வீசப்பட அவனின் அலரலின் ஊடே ராமின் நித்வி என்ற அலரலும் வெளி வந்தது... ஆதவின் கண் முன்னே அவனின் மையு ஒரு திறைக்குள் மாயமாய் மறைந்திருந்தாள்...
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...