விடியலிலே ஐலாவை காணாமல் அவளை எழுப்ப வந்திருந்த வீனா பரபரப்புடன் அனைவரிடமும் இவ்விஷயத்தை தெரிவிக்க பயிற்சி கூடத்திலும் சமையற்கூடத்திலும் இறங்கியிருந்த அனைவரும் ஐலாவை தேட தொடங்கினர்...
ஐலா அற்புத கோட்டையின் எந்த ஒரு இடத்திலும் இல்லை... பத்தாததற்கு எவராவது வந்து கடத்தி சென்றிருந்தாலும் அப்படி ஒருவர் வந்ததற்கான அடையாளமும் இல்லை...
அனைவரையும் விட அஜய் தான் அதிகமாய் பதறி கொண்டிருந்தான்.. அனைவரும் அவன் தோழி தானே என நினைத்திருக்க அவனுக்கு தானே தெரியும் அவள் உண்மையில் அவனுக்கு யாரென்று...
ரக்ஷவ் : அக்கா எங்க குருவே...
ரவி : எங்களுக்கும் தெரியல ரக்ஷவ்.. ஐலாவா கண்டிப்பா கோட்டைய விட்டு வெளிய போய்ர்க்க மாட்டா...
அஜய் : அவளுக்கு வழியும் தெரியாதுப்பா.. அவள யாரோ கடத்தீட்டு தான் போய்ர்க்காங்க என்றவனின் குரலில் அப்பட்டமாய் பயம் அப்பியிருந்தது..
அனு : கூல் அஜு.. யாராவது கடத்தீட்டு போயிருந்தா நமக்கு கண்டிப்பா தெரிய வந்துருக்கும்.. ஐலாக்கு எதுவும் ஆகாது.. அவள காப்பாத்தீடலாம்...
ப்ரியா : நா நேத்து என்ன நடந்ததுன்னு பாக்க முயற்சி பன்றேன் என ஒரு அறைக்குள் செல்ல முயன்றவளை ஆதியன்த்தின் குரல் தடுத்தது...
ஆதியன்த் : நேத்து ஐலாவ ஏதோ ஒரு பாம்பு தான் கடத்தீட்டு போய்ர்க்கு மா தன் வெண்மை நிற கண்களால் அனைவரையும் ஏறிட்டான்...
திவ்யா : உனக்கு எப்டி ஆதி கண்ணா தெரியும்...
ருத்ராக்ஷ் : கோவன்களோட சக்தி மட்டுமில்லம்மா... நாகனிகளோட சக்திகளும் எங்களுக்கு இருக்கு என கூறவும் நம் நாயகிகளுமே அதிர்ந்து தான் போயினர்...
சித்தார்த் : ஆமா என்னால அனும்மா மாரி ஒருத்தர் மைண்ட கன்ட்ரோல் பன்னவும் முடியும் அவங்க நினைக்கிரதையும் கேக்க முடியும்... ருத்துவால திவிமா மாரி ஒரு இடத்துலேந்து இன்னோறு இடத்துக்கு மாற முடியும்.. ஆன்மாக்களோட உரையாட முடியும்.. அத்துவால காலத்தை மாத்த முடியும்.. நடந்தது நடக்க போறத தெரிஞ்சிக்க முடியும்...
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...