மாயம் - 28

352 37 195
                                    

அற்புத கோட்டை

ரக்ஷவும் சரணும் மிகவும் தீவிரமாய் அவரவர் வாளை உரச விட்டு அனைவரையும் கன்னத்தில் கை வைத்து என்ன நடக்கும் என ஆர்வத்துடன் பார்க்க வைப்பதை போல் ஒருவர் மாற்றி ஒருவர் விட்டு கொடுக்காமல் அடியும் வாங்காமல் வாள்களை மாத்திரம் தடுத்து கொண்டே இருந்தனர்...

எனெனில் ரக்ஷவ் முதலில் பயின்றதே தற்காப்பை மாத்திரம் தான்... எவ்விதமான வழிகளில் வாள் தன்னை தாக்க வந்தாலும் அதை எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் மூன்றே நாட்களில் தெளிவாய் தேரியிருந்தான்..

ரக்ஷவ் மாத்திரமல்ல சஹாத்திய சூரர்களின் தற்காப்பு பயிற்சிகளும் அவர்களை அசுவாசப்படுத்தும் மருத்துவ தளபதிகளின் மனப்பயிற்சிகளும் படைதளபதிகளின் உடற்பயிற்சிகளும் பராக்ரம வீரன்களையும் நன்கு பழக்க விட்டிருந்தது...

முன்பு வாளை பிடிக்க கடினப்பட்டவர்களால் இப்போது சுலபமாய் பற்றி அதை கொண்டே எதிராளியை சமாளிக்கவும் முடியும்...

இவர்கள் இவ்வாறு வாள்களை களத்தில் பேச விட்ட நேரம் சட்டென இருண்ட வானம் தன் பேரிடியை முழங்கி கனமழையை பொழியச்செய்ய புயலையும் மிஞ்சி கொண்டு சுறாவளி காற்று வீச தொடங்கியது...

மழையை கண்டதும் வாளை இடையில் பத்திரப்படுத்திய ரக்ஷவ் பல நாள் களித்து கிடைத்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்க அவனுடன் நம் குட்டி ராணிகளான நீலியும் பிறையும் இணைந்து ஆட்டம் போட்டனர்...

சஹாத்திய சூரர்களுக்கு அவ்வறிகுறிகள் அனைத்தையும் தெளிவூட்ட அவர்களின் முகத்தில் பல்பெரிவதை கண்டு சேவன் ஏதோ கேட்க போகும் முன் சட்டென ஒரு நீல வளையம் அங்கு தோன்றி அனைவரையும் தூர தள்ள இவர்கள் தடுமாறி கீழே தள்ளப்பட்டனர்...

மழையில் விளாயாடி கொண்டிருந்த ரக்ஷவ் அந்த நீல வளையத்தை எதற்சையாய் கண்டு திரும்ப அதிலிருந்து நம் முதலணி நாயகிகளும் அவர்களுடன் ஐலா மற்றும் மோகினியும் வந்திருந்தனர்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt