மாயம் -1

1.2K 51 89
                                    

காரிருள் மேகங்கள் விண்ணில் சூழ்ந்திருக்க... சிறு சிறு நட்சத்திரங்கள் பால் நிலவை மூலையிலிருந்து இரசித்துக் கொண்டிருக்க.... பௌர்ணமி நிலவோ மேகங்களின் இடையில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.....

இருள் நிறைந்த வனத்தின் அருகில் அமைதியின் உருவாய் ஓடிய நதி.. பௌர்ணமி நிலவின் ஒளியில் மின்னிக் கொண்டிருக்க.... பறவைகள் கூட்டில் அதன் குழந்தைகளுடன் நிம்மதியான உறக்கத்தில் இருக்க.... நதியை ஒற்றி இருந்த அம்மரத்தில்ல ஆந்தை ஒன்று அமர்ந்த நிலையில் இமை மூடி உறங்கிக் கொண்டிருக்க.... இரவின் அமைதி அவ்விடம் எங்கிலும் படர்ந்திருந்தது.....

நொடி பொழுதில் பரவியிருந்த அமைதி சலசலக்கும் ஒலியில் கலைந்து போனது.... அமைதியின் உருவாய் இருந்த நதியில் வேகம் அதிகரிக்க.... பௌர்ணமி நிலவு மெல்ல மறைந்து மேகம் ஒன்றில் தன்னை முழுதாய் மறைத்துக் கொண்டு.... உலகின் வெண்மையை பறித்து இருள் சூழ வைத்தது....

மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஆந்தை இமைகளை பிரிக்க.... ஆற்றின் ஓட்டத்தை கண்டு அதிர்ச்சியுடன் நிலவை காண திரும்ப அங்கோ நிலவு மறைந்து பௌர்ணமி அல்லாமல் அம்மாவாசையாய் காட்சியளித்தது உலகம்....

கண்கள் பரபரத்தவாறு அந்நதியையே உற்று நோக்கியது அந்த ஆந்தை... மெல்ல மெல்ல நதியின் ஓட்டம் அதிகரித்து சலசலக்கும் ஒலி அடங்க..... இருளிள் இருந்து ஒரு நீண்ட வால் வெளியேற.... அது நொடியில் காலாய் மாறி நடக்க.... இருளிள் பலுப்பு நிற விழிகள் ஒன்று மின்னி மறைய..... சடாரென வந்த கூர்மையான குச்சி போன்ற விரல் இல்லா கைகள் அதிர்ச்சியுடன் இருந்த ஆந்தையை அது எதிர்பார்க்கா நேரம் குத்தி உள்ளே இழுத்துக் கொண்டது.....

ஆந்தையின் அலரலில் பறவைகள் எழ.... நடக்கும் அபாயத்தை உணர்ந்து ஆந்தையை காப்பாற்ற இயலாதென அறிந்ததால் அதன் குழந்தைகளை காப்பாற்ற முயல.... நொடியில் அதன் பொந்தில் நுழைந்த ஒரு கரம் அதுகளை கதற கதற இருளிள் இழுத்துக் கொண்டு மறைந்தது....

அடர்ந்த இருள் மறைந்திட... தன் உலக மக்களை இருள் மீதான அச்சத்தை போக்க ஒளி பரப்பியவாறு நிலமகளின் மடிமீதிருந்து எழுந்தான் சூரியன்.... அவனின் வருகையை அலாரம் வைத்து பார்ப்பதை போல் சரியாய் மொட்டை மாடியில் வந்து நின்றிருந்தான் அவன்....

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя