மாயம் - 38

357 34 126
                                    

பஞ்சலோக அச்சுடன் மிளிர்ந்த அவ்வாயிலை கண்டு தனிச்சையாய் ரனீஷ் புன்னகைத்தான்...

ரனீஷ் : தாம் புரிந்த உதவிக்கு மிக்க நன்றி சகோதரி என லீலாவதிக்கு பணிந்து நன்றி கூறினான்...

லீலாவதி : தமக்கு உதவி புரிந்ததற்கு நன்றி தேவையற்றது சகோதரரே.. வெற்றியுடன் திரும்புங்கள் என புன்னகையுடன் அங்கிருந்து விடை பெற்றாள்...

வளவன் : அஷ்வன்த்... நிரு இத உன் கிட்ட கொடுக்க சொன்னா டா என அந்த சந்தன நிற கல்லை நீட்ட அதன் உபயோகமும் பயன்பாடும் அறிந்திருந்ததால் மனதிலே நிருவுக்கு நன்றி கூறி விட்டு அதை வாங்கி வைத்து கொண்டான் அஷ்வன்த்...

துருவ் : சரி உள்ள போலாமா...

வீர் : துருவா நீயுமா வர போற...

துருவ் : ஆமா சித்தா.. நா கயல் பாப்பாவ தேட உங்களுக்கு உதவுறேன்... என்னால பாப்பா எங்க இருக்கான்னு கண்டுப்புடிக்க முடியும்...

வளவன் : நாம தாமதிக்க வேண்டாம் இருட்ட தொடங்கீடுச்சு.. அதனால விடியிரதுக்கு முன்னாடியே திரும்ப வரனும்.. சர்ப்பலோகத்துக்கும் பூலோகத்துக்கும் நேரவேளைகள் வேறுபாடு இருக்கும்... அதனால சீக்கிரம் போகலாமா என கேட்டதும் தங்களை விடுத்தும் வளவனுக்கு சர்ப்பலோகத்தை பற்றி பலவை தெரியுமென்பதால் நாயகன்களும் உடனே அமோதித்து வாயிலை நோக்கி சென்றனர்...

ரனீஷ் அவ்வாயிலின் மையத்திலிருந்த நாக அச்சை ஒரு முறை நன்கு அழுத்த மெதுவாய் அதை சுற்றியிருந்த ஐந்து அலைகளும் வட்டமாய் சுழன்று சிவப்பு நீலம் வெள்ளை மஞ்சள் பச்சை என வரிசையாய் நின்றதும் ஒரு விரிசல் தோன்றி அதிலிருந்து பளிச்சென்ற ஒளி வெளியேறியது...

கண்களை கூசிடும் அந்த ஒளியிலிருந்து புதிய பாதை தென்பட அனைவரும் ஒருமித்து உள்ளே நுழைந்தனர்...

சர்ப்பலோகத்தின் அழகினை மெச்ச நேரம் அளிக்காமல் அவர்கள் முன் தோரணையாய் நின்றிருந்தான் விஞ்ஞவெள்ளன்...

விஞ்ஞவெள்ளன் : வரவேற்கிறேன் வீரர்களே.. தாம் இத்துனை விரைவில் எம் ஞாலத்தில்(உலகத்தில் ) விஜயம் புரிவீர் என எதிர் நோக்கவில்லை... ஆயினும் தமது வரவில் மனமார மகிழ்ச்சி அடைகிறேன் என எகத்தாளமான புன்னகையுடன் வரவேற்த்தான்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Where stories live. Discover now