தன்னை அடைத்து வைத்திருந்த கொடிகள் மெதுமெதுவாய் விலகி அதில் ரவியின் விம்பம் தெரிந்த பின்னே துருவ் நிலையடைந்தான்...
மெதுமெதுவாய் அந்த செடி கொடிகளை அறுத்தெறிந்த ரவி " துருவ் " என அழைக்கவும் அழுது கொண்டே மாமா என தாவி அணைத்து கொண்டான் துருவ்...
ரவி : ஷ் ஷ் துருவ்.. நீ பாதுகாப்பா இருக்க... பயப்புடாத... நாங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம் என அவனின் முதுகை நீவி விட்டு தலையை கோதி விட்டான்...
துருவ் : மாமா என இன்னும் அவன் அழுதான்...
ரவி : ஒன்னும் இல்ல எழுந்திரி வா என மெதுவாய் எழ வைத்தான்... ஆனால் அப்போதும் துருவ் ரவியின் அணைப்பிலிருந்து விலகாமலே ஒன்றி நின்றான்...
மற்ற நாயகன்களும் அந்த நாகமனிதன் சென்றதும் இவர்களிடம் ஓடி வந்தனர்...
வளவன் துருவிற்கு ஏதேனும் காயம் உள்ளதா என ஆராய்ந்து அவனோடு அணைத்து கொண்டான்...
துருவ் : அப்பா அப்பா கயல் பாப்பாவ அவங்க தூக்கீட்டு போய்ட்டாங்க என அதே அழுகையுடன் கூற அனைவரும் சற்றே திடுக்கிட்டனர்...
வளவன் : பாப்பாவ யாரு டா தூக்கீட்டு போனது...
துருவ் : அவங்க தான்... நாகமனிதர்கள் கிடத்தவில்லை என கூறுகியையில் இவன் யாரை குறிப்பிடுகிறானென்று தெரியாமல் குழப்பம் அதிகரித்தது...
ரவி : அவங்கன்னா யார துருவ் சொல்ற...
துருவ் : தெ..தெரி..யல மாமா.. ஆ..ஆனா அவங்க எல்..லாரும் ப்லூ கலர்ல இருந்தாங்க...
வீர் : துருவ் என்ன நடந்துச்சுன்னு உனக்கு நியாபகம் இருக்கா...
துருவ் : நா கயல் பாப்பாவ அழச்சிட்டு வீட்டுக்கு தான் வந்துட்டு இருந்தேன் சித்தா.. அப்போ யாரோ கயல் பாப்பாவ கூப்ட்டாங்க.. அந்த குரல கேட்டப்போ அது சாதாரண மனிஷனோட குரல் மாரி தெரியல.. பாப்பா நா கூப்ட கூப்ட கேக்காம இந்த காட்டுக்குள்ள வந்துட்டா... நானும் அவ பின்னாடியே வந்தேன்.. அவ எங்கயோ வேகமா ஓடுனா.. திடீர்னு என்ன ஏதோ தள்ளி விற்றுச்சு.. பாப்பா கத்துனத கேட்டுட்டு நா எழுந்து பாத்தேன்... யாரோ பாப்பாவ தூக்கீட்டு வேகமா ஒரு சுழல்க்கு உள்ள போனாங்க... என்னால சரியா பாக்கவே முடியல.. அப்ரம் மயங்கீட்டேன்.. அதுக்கப்ரம் என்ன நடந்துச்சுன்னே எனக்கு தெரியல...
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...