வானம் இருண்டு கருமேகங்களின் ஆட்டம் நிலத்தினை நனைக்க.. கனமழை பொழிந்து மண்ணை ஈரமாக்கியது..
மண்வாசனை நாசியை துளைக்க இன்னும் நிகழ்ந்ததை ஜீரனிக்க இயலாமல் அக மகிழ்ந்து முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் கண்கள் முழுவதும் கண்ணீர் ததும்ப பால்கெனியில் நின்றிருந்தான் அஷ்வித்..
ம்க்கும் என யாரோ செருமம் சத்தத்தில் நிலையடைந்தவன் மாமா என்ற கூவலுடன் அவன் பின் நின்ற ரனீஷை ஓடி சென்று கட்டி கொண்டான்...
ரனீஷ் : அடேய் என்ன டா சின்ன புள்ள மாரி அழுதுட்டு... கல்யாணம் வயசு வந்துடுச்சு உனக்கு.. நாழு கழுதை வயசாக போகுது என்ன அழுகை வேண்டி கிடக்கு உனக்கு...
அஷ்வித் : ஏன் எட்டு காழுதை வயசாச்சு உனக்கு நீ இன்னும் ரக்ஷா அத்தைக்கூட சேட்டை பன்னிட்டு தான இருக்க.. என அழுகையுடனே அவனை கலாய்க்க...
ரனீஷ் : உன்ன போய் சமாதானம் பன்ன வந்தேன் பாரு.. போடா அப்டி...
அஷ்வித் : அஅ.. சும்மா சொன்னேன் மாமா... ஹஃக்கி ஹஃக்கி என மீண்டும் கட்டியணைத்து கொண்டான்...
ரக்ஷா : மாமனுக்கும் மருமகனுக்கும் என்ன இங்க பாசப்போராட்டம் என்றபடி சிரித்தவாறு உள்ளே வந்தாள்... அவளுடன் மற்ற முதலணி நாயகர்கள் அனைவரும் வந்தனர்...
அஷ்வித் : நிச்சயம் பன்ன போறோம்னு சொல்ல தெரிஞ்சுதே.. அதுல மாப்பிள்ளையே நான் தான்னு எனக்கு யாராவது இன்ஃபார்ம் பன்னீங்ளா... என முகத்தை தூக்கி வைத்து கொண்டு முறைக்க...
வர்ஷி : இல்லனா மட்டும் சாரு பொண்ணு வேணாம்னு சொல்லிடுவாரோ...
அஷ்வித் : நீ பேசாத சித்தி.. நீ நியாயப்படி என் சைடு தான... கடசியா டயலாக் விட்டியே அப்பையாவது சொல்ல தோனுச்சா உனக்கு..
முகில் : ஏன் டா எங்கள இவ்ளோ கேள்வி கேக்குறியே நந்துவ நீ காதலிக்கிறன்னு எங்க கிட்ட சொன்னியா.. என் தங்கச்சிய திட்ட வந்துட்ட.. என வர்ஷிக்கு ஆதரவாய் அவள் அண்ணன் ஆஜரானான்..
அஷ்வித் : இதெல்லாம் போங்கு..யாருமே எனக்கு சப்போர்ட்டா இல்ல...
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...