மாயம் - 50

282 29 77
                                    

வண்ண வட்டங்களுக்கு மத்தியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு நாக மனிதனை கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதியன்த்

அவனருகிலே மற்றவன்களும் அந்த உயிரற்ற நாகமனிதனின் உடலை கண்டவாறு நின்று கொண்டிருக்க ஆதியன்த் வாய் திறவாமலே நேற்று இரவு ஐலாவை கடத்தி சென்ற சர்ப்பம் இவனாகத் தான் இருக்கக் கூடுமென இரண்டாமணி நாயகன்கள் அனைவரும் கணக்கிட அதற்கு அடுத்தக்கட்டமாய் அவர்கள் அனைவரின் மூளையிலும் உதித்த கேள்வியை ருமேஷ் வெளியிலே கேட்டிருந்தான்...

ருமேஷ் : அப்போ ஐலா எங்க...

ஆதியன்த் : தெரியல... ஆனா இதே சர்ப்பத்தத் தான் நான் பாத்தேன்...

அஜய் : ஐலா சர்ப்பலோகத்துல தான் இருக்கா... நாம இன்னும் தாமதிக்க வேண்டாம் ப்ரதர்ஸ்..

துருவ் : அவசரப்படாத அஜு... சர்ப்பலோகம் போறதுக்கு நமக்கு பாதை வேணும்...

வருண் : பாதைனா... எத துருவ் சொல்ற...

துருவ் : வழி தான் டா...

ராம் : ஏன் டா வழியே தெரியாமத் தான் எங்கள கூட்டீட்டு வந்தீங்களா

விதுஷ் : ராசா அந்த வழிய நீங்க தான் கண்டுப்புடிக்கனும்... இருந்த எல்லா வழியும் அழிஞ்சு போச்சு.. இருக்குரது ஒன்னு தான்... அதுவும் சாகாரகாந்தனோட கண்பார்வைல தான் இருக்கு...

ருத்ராக்ஷ் : அப்போ நாமளே உருவாக்கனுமா....

ஆதவ் : உருவாக்குரதுக்கு உண்டான சக்தியெல்லாம் நம்ம கிட்ட கெடையாது டா... மோர் ஓவர் முக்கியமான தேவை கொண்ட நாக சக்தி முழுசா இங்க யார் கிட்டயுமே இல்ல... அதற்கு துருவ் தனக்குள் நாக சக்தி இருக்கிறது என கூற வருவதற்கு முன்பாக

சித்தார்த் : அப்டீனா நாம சாகாரகாந்தனோட கன்ட்ரோல்ல இருக்குர வாயில கண்டுப்புடிக்கனுமா...

கார்த்திக் : மச்சான்.. அவன் கன்ட்ரோல்க்குள்ள இருக்க வாயில் வழியா நாம சர்ப்பலோகம் போக முடியும்னு நினைக்கிர... என யோசனையுடன் அருகில் நின்ற அருணிடம் வினவ அவன் யோசனையிலிருந்து வெளி வராமலே

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang