9 பூங்குழலிக்கு விருப்பமில்லை

2.3K 86 6
                                        

9 பூங்குழலிக்கு விருப்பமில்லை

மகிழன் கூறியதை கேட்ட வடிவக்கரசிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் எப்படி பூங்குழலியை இவ்வாறு அவமானப் படுத்தலாம்? அவள் பின்னால் வெட்கம்கெட்டு சுற்றியது அவன் தானே? இங்கு எல்லாமே பணம் தானா? அப்படி என்றால், பூங்குழலிக்கு இப்படிப்பட்ட ஒருவன் தேவையில்லை. அவளுக்கு ஒரு நல்லவன் தான் துணையாக கிடைக்க வேண்டும். தங்களுக்கும் சுயமரியாதை உண்டு, தங்களாலும் யாரது உதவியும் இன்றி வாழ முடியும் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களைப் பிரித்து மேய்ந்து விட தயாரானார் வடிவுக்கரசி. ஆனால் அவர்கள் பேசியதை கேட்டு அப்படி நின்றார்.

"நான் என்ன செய்ய போறேன்னு தெரியல. மகிழனுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு எப்படி சிவகாமி கிட்ட சொல்லுவேன்?" மனதார வருந்தினார் மணிமாறன்.

"ஏற்கனவே தில்லை அண்ணனை பறி குடுத்துட்டு நிக்கிறவங்களுக்கு, நம்ம பங்குக்கு பிரச்சனை கொடுக்க போறத நினைச்சா, எனக்கு என் மேலயே ஆத்திரம் வருது" தலையில் அடித்துக் கொண்டார் மின்னல்கொடி.

"மகிழனை நம்ம அப்படி எல்லாம் விட்டுடக் கூடாது. நம்ம கம்பெனியோட மேனேஜின் போர்டுல இருந்து அவனை நான் எடுத்துடப் போறேன். இந்த சொத்து ஒன்னும் என் பாட்டன் பூட்டன் சம்பாதிச்சது கிடையாது. மலரவன் சம்பாதிச்சு சேர்த்தது. அவன் தான் விழுந்த இந்த கம்பெனியை தூக்கி நிறுத்தினவன். இதுல சொந்தம் கொண்டாட மகிழனுக்கு எந்த உரிமையும் இல்ல. அவனை போர்டுல இருந்து தூக்கி எறிஞ்சா, அப்ப தெரியும் யாரு பிச்சைக்காரன்னு" சீறினார் மணிமாறன்.

"அவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறது எனக்கு நல்லதா படல. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட முடியும். ஆனா, கட்டாயப்படுத்தி அவனை அவ கூட சந்தோஷமா நம்மால வாழ வைக்க முடியாது. அது பூங்குழலியோட  சந்தோஷத்தை குலைக்கும். அவ சந்தோஷமா வாழ வேண்டிய குழந்தை. இவனை விடுங்க" கண்ணீர் சிந்தினார் மின்னல்கொடி.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Onde histórias criam vida. Descubra agora