46 என்ன விஷயம்?
கீர்த்தியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. கோபம் அவள் மனதில் தீக்குழம்பென கொதித்துக் கொண்டிருந்தது.
"இந்த மகிழனுக்கு எவ்வளவு தைரியம்? என்னை பத்தி அவன் என்ன நினைச்சுகிட்டு இருக்கான்? என்னை போய் என்ன வேலை செய்ய சொன்னான். நான் எப்பேர்பட்ட இடத்தில பிறந்து வளர்ந்தவ... இதுக்காக அவன் நிச்சயம் வருத்தப்படுவான். இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. இந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாம் அவங்களோட லிமிட்டை ரொம்ப கிராஸ் பண்றாங்க. இந்த வீட்டை விட்டு நான் போறதுக்கு முன்னாடி இவங்க எல்லாருக்கும் சரியான பாடத்தை சொல்லிக் கொடுத்துட்டு தான் போவேன்" என்று சபதம் ஏற்ற கீர்த்தி,
தன் அப்பாவுக்கு அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை ஏற்றார் குமரேசன்."டாட், இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது. நான் இனிமே இங்க இருக்க மாட்டேன்" சீறினாள்.
"என்ன ஆச்சு, டா செல்லம்?" பதறினார் குமரேசன்.
"இன்னைக்கு என்னை என்ன செய்ய வெச்சாங்க தெரியுமா?"
"என்ன?"
"அந்த மின்னலுக்கு என்னை பெட் பேன் வைக்க சொன்னாங்க" ஆத்திரத்தில் பல்லை கடித்தாள்.
"என்ன்னனது? நீ எதுக்காக அதை செஞ்ச? அதை அப்படியே அவங்க மூஞ்சில தூக்கி வீசி அடிக்கிறது தானே?" என்றார் கோபமாய்.
"என்னால அப்படி செய்ய முடியாது. நான் தேங்காய் எண்ணெயை கீழே கொட்டி மின்னலை கீழே விழ வச்சதை அந்த பூங்குழலி வீடியோ எடுத்துட்டா. அதை காட்டி என்னை மிரட்டுறா, டாட்"
"இப்போ நான் என்ன செய்யணும்?"
"இன்னைக்கு ராத்திரி மலரவன் கூட அவ லண்டனுக்கு போறா. அவ திரும்பி இந்தியாவுக்கு வரக்கூடாது. நீங்க என்ன செய்விங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது. அவ சாகணும்"
"விடு. அவளோட சாம்பல் கூட இந்தியாவுக்கு திரும்பி வராது"
"அவ லண்டன்ல சாகும் போது, இங்க மகிழனுக்கும் தண்டனை கிடைக்கணும்"
ESTÁS LEYENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...