49 புரிதல்
மித்திரனின் கடும் முயற்சியால் லண்டன் செல்வதற்கான தனது விமான பயண சீட்டை பெற்றார் மணிமாறன். தனது ட்ராவல் ஏஜென்சி நண்பன் மூலமாக அதை பெற்றான் மித்திரன். அதை அவன் மலரவனிடம் கொடுக்க, மலரவன் மணிமாறனிடம் கொண்டு வந்து சேர்த்தான்.
அன்பு இல்லம்
வீட்டிற்கு வந்த மலரவன் நேராக மணிமாறனின் அறைக்குச் சென்றான். அனைவரும் மின்னல்கொடியுடன் அங்கு தான் இருந்தார்கள். அனைவரும் அவனைப் பார்க்க, அவனோ பூங்குழலியை பார்த்து மென்மையாய் புன்னகைத்தான்.
"மலரா, மித்திரன் டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டானா?" என்றார் மணிமாறன்.
"ஆமாம் பா" என்றபடி தன் பாக்கெட்டில் இருந்த பயணச்சீட்டை எடுத்து அவரிடம் கொடுத்தான் மலரவன்.
"நல்ல காலம், எங்க கிடைக்காம போகுமோன்னு பயந்துட்டேன்" என்றார் மணிமாறன்.
"நீங்க உங்க திங்ஸை எல்லாம் பேக் பண்ணிட்டீங்களா?" என்றான் மலரவன்.
"இன்னும் இல்ல" என்றார் வருத்தத்தோடு.
"ஒன்னும் பிரச்சன இல்ல. நான் பண்ணி தரேன்"
"நீயா?"
"ஆமாம் நான் தான்"
"இல்ல மலரா, பரவால்ல. நானே பண்ணிக்கிறேன்"
"அப்பா, சும்மா காமெடி பண்ணாதீங்க. நீங்க வேலைக்கு போகும் போதே, கர்சீஃப் முதல் கொண்டு கார் சாவி வரைக்கும் உங்களுக்கு தேவையானதை அம்மா தான் எடுத்து கொடுப்பாங்க..."
சங்கடத்துடன் தன் நெற்றியை சொறிந்தார் மணிமாறன்.
"பரவாயில்லப்பா... பீல் பண்ணாதீங்க. நான் தான் ஹெல்ப் பண்ண இருக்கேனே"
பெண்கள் அனைவரும் புன்னகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"நான் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன்..."
அவன் அங்கிருந்து செல்ல முயல,
"நான் உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?" என்றாள் பூங்குழலி.
YOU ARE READING
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...