40 ஆட்டம்

1.6K 87 8
                                    

40 ஆட்டம்

கூக்குரலிட்டபடி கீழே விழுந்தார் மின்னல்கொடி. அவருடைய அந்த குரல், வீட்டிலிருந்த அனைவரையும் வரவேற்பறைக்கு இழுத்து வந்தது. அனைவருக்கும் முன்னால் அங்கு ஓடிச் சென்றது பூங்குழலி தான் என்று கூறத் தேவையில்லை. அவர் விழுவதை கண்ணெதிரில் பார்த்தவள் ஆயிற்றே...! அவள் மின்னல்கொடியை தூக்க முயன்றாள். ஆனால், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரது கால் சுளுக்கிக் கொண்டதால் அவரால் அந்த வலியை தாங்க முடியவில்லை.

அனைவரும் அங்கு விரைந்து வந்தார்கள். மலரவனும், மகிழனும் அவரை நோக்கி ஓடிவந்து, அவரை தூக்கிக்கொண்டு அவரது அறைக்கு விரைந்தார்கள். வலி தாங்காத மின்னல்கொடியின் கண்கள் பொழிந்த வண்ணம் இருந்தன.

தனது கைபேசியை எடுத்து மருத்துவரை அழைத்தான் மலரவன். மின்னல்கொடியின் அருகே கட்டிலில் அமர்ந்து கொண்டாள் பூங்குழலி. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கீர்த்தியின் இழிசெயலை அவள் கண்கூடாக கண்டாள். தன் கையில் இருந்த கைபேசியை பார்த்தாள். இன்னும் அந்த வீடியோ ஓடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்தி, சேமித்துக் கொண்டாள். அவளுக்கு கீர்த்தியை பற்றி தெரியும். ஆனால் அவள் இதை எதற்காக செய்தாள் என்று அவளுக்கு தெரிந்து கொள்ள வேண்டும்.  அது அந்த குடும்பத்தினரை காயப்படுத்துவதற்காகவா? இதற்காகத் தான் அவள் மகிழனை திருமணம் செய்து கொண்டாளா? இதனால் அவளுக்கு கிடைக்கப் போவது என்ன? அவள் அவ்வளவு கொடுமைக்காரியா?

அப்பொழுது மருத்துவர் வந்தார். அவரை பின்தொடர்ந்து கீர்த்தியும் வந்தாள். அவள் மின்னல் கொடியை கண்ணீருடன் கட்டிக் கொண்டாள்.

"உங்கள காயப்படுத்துற அளவுக்கு கடவுளுக்கு கண்ணில்லாம போயிடுச்சா? ஏன் அவர் எப்பவும் நல்லவங்களையே சோதிக்கிறாரு?" அவரது தோளில் சாய்ந்து அழுதாள் கீர்த்தி.

சங்கடமாய் உணர்ந்தார் மின்னல்கொடி. உலகிலேயே கொடுமையான விஷயம், நம் எதிரில் இருக்கும் நபர் நடிக்க தான் செய்கிறார் என்று தெரிந்தும், இயல்பாய் இருப்பது. அப்படித்தான் இருந்தது மின்னல்கொடியின் நிலையும். ஏற்கனவே அவருக்கு கால் வலி உயிர் போனது... அது போதாது என்று, இவள் வேறு...!

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now