38 மலரவனின் ஆர்வம்
பூங்குழலிக்காக தான் வாங்கிய பிறந்தநாள் அட்டை, அவள் கையில் இருப்பதை பார்த்த மலரவன் துணுக்குற்றான். அவனது முகபாவத்தை படித்த பூங்குழலி, அவன் சங்கடத்தில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள். ஆம், அவன் இதை எதிர்பார்க்கவில்லை. மெல்ல அவளை நோக்கி வந்தவன், ஐஸ்கிரீம் கரை படிந்த கோட்டை மீண்டும் அந்த பெட்டியில் வைத்தான்.
"அந்த கோட்டை டிரைகிளீன் பண்ணிடுவேன்னு சொன்னிங்களே... நீங்க அதை செய்யலையா?" என்றாள் பூங்குழலி.
"டைம் கிடைக்கல..."
கீழே குனிந்து, அவளுக்காக வாங்கி வைத்திருந்த கைப்பையை அவன் எடுக்க முயல, அவன் அதை தொடுவதற்கு முன், அதையும் மற்ற பிற பொருள்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டாள் பூங்குழலி.
தன் கோரை பல்லை நாக்கால் தொட்டபடி, கண்களை சுருக்கி அவளை ஏறிட்டான் மலரவன். மோதிர டப்பாவில் இருந்த மோதிரத்தை எடுத்து, அவள் தன் கையில் அணிந்து கொள்ள முயன்றாள். அவள் கையில் இருந்து அதை பிடுங்கினான் மலரவன்.
"அப்படின்னா, அந்த கார்டுல நீங்க எழுதி இருந்த, *சுவாரஸ்யமான பெண்* நான் இல்லையா? இந்த கிப்ட் எல்லாம் நீங்க எனக்காக வாங்கலையா?" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.
மெல்ல தன் கண்களை இமைத்த மலரவன், அவளது கையைப் பிடித்து அந்த மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான், அவள் கேட்ட கேள்விக்கு செயலால் பதிலை தந்து.
"உன் முன்னாடி முட்டி போட்டு, உன்கிட்ட என் காதலை ப்ரொபோஸ் பண்ணும் போது இதை உன்கிட்ட கொடுக்கணும்னு நினைச்சேன்" கண்களை மூடி புன்னகைத்தான் மலரவன்.
அதைக் கேட்ட அவள், ஆச்சரியமடைய வில்லை, அதிர்ச்சி அடைந்தாள்.
"நீங்க அவ்வளவு பெரிய பைத்தியக்காரனா?" என்றாள் நம்ப முடியாமல்.
"இருக்கலாம் ( என்று சில நொடி இடைவெளி விட்டவன் ) ஆனா எல்லா விஷயத்துலயும் இல்ல..." என்றான் ஆழ்ந்த பொருளோடு.
ESTÁS LEYENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
