42 பூங்குழலியின் யோசனை

1.7K 89 13
                                    

 42 பூங்குழலியின் யோசனை

அவ்வளவு எளிதாய் மலைத்துவிடக் கூடியவன் அல்ல மலரவன். ஆனால் பூங்குழலி அவனை முதல் முறையாக அணைத்த போது, அவனால் மலைக்காமல் இருக்க முடியவில்லை. தான் கனவு காணவில்லை என்பது அவனுக்கு நிச்சயமாக தெரியும். ஏனென்றால், அவள் அணைத்த உடன் அவனுக்குள் நிகழ்ந்த மாற்றத்தை அவன் நன்றாகவே உணர்ந்தான். அவனது உடலில் ஜிவ்வென்று ரத்தம் பாய்ந்தது. ஆனால் இதில் பூங்குழலியுடைய மனநிலை என்ன?

"பூங்கு....ழலி..." தடுமாறினான் அவன்.

"ம்ம்ம்?"

"இப்போ நான் என்ன செய்யணும்?"

அவனது நெஞ்சில் சாய்ந்தபடி சிரித்த அவள்,

"ஒன்னும் செய்யாதீங்க" என்றாள்.

"இல்ல, நானும் உன்னை கட்டிப்பிடிச்சுக்குவேன்" என்று அவனும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

அவளும் அவன் நெஞ்சில் ஆழமாய் முகம் புதைத்தாள்.

"பூங்குழலி, நீ நிஜமாவே சீரியஸா தான் இருக்கியா?" என்றான் தாழ்ந்த குரலில்.

அவள் இல்லை என்று தலையசைக்க,

"எனக்கு தெரியும், நீ சீரியஸா தான் இருக்க" என்றான் மலரவன்.

"நீங்க ரொம்ப குழம்பி போய் இருக்கிற மாதிரி தெரியுது...?"

"ஏன் நான் குழம்ப மாட்டேன்? நீ என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கியே..."

"அப்படின்னா நான் விலகி போகட்டுமா?" என்றாள் தன் தலையை உயர்த்தி அவனை பார்த்து.

"தேவையில்ல... நான் குழப்பமாவே இருந்துட்டு போறேன்..." அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

"மலர்..."

"ம்ம்ம்?"

"ஐ லவ் யூ"

திடுக்கிட்டு கண்ணை திறந்தவன், தன்னை மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த அவளை ஏறிட்டான். தன் கையால்  அவள் முகத்தை உயர்த்தினான். அவனை மருட்ச்சியுடன் பார்த்தாள் பூங்குழலி.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now