31 பேசா மடந்தை?
போதை மருந்து தடுப்பு பிரிவின் விசாரணை அறையில் அமர்ந்திருந்தார் குமரேசன்.
"நீங்க என்னை எதுக்காக வர சொன்னிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா, சார்?"
"நாங்க ராகேஷை அரெஸ்ட் பண்ணி இருக்கோம்"
"ராகேஷா?"
"ஆமாம்... எம் எம் கம்பெனியில வேலை செய்றாரே, அந்த ராகேஷ் தான்"
"ஓ... அவரா?"
"உங்களுக்கு அவரை தெரியுமா?"
"ஏன் தெரியாது? ரொம்ப நல்ல பிள்ளையாச்சே"
"நீங்க அவருக்கு 25 லட்சம் கொடுத்ததா அவரு சொல்றாரு"
"ஆமாம், கடனா கொடுத்தேன்"
"கடனாவா?"
"ஆமாம். சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்க போறதா சொன்னாரு. அதுக்காக ரொம்ப நாளா என்கிட்ட பணம் கேட்டுக்கிட்டு இருந்தாரு. நான் அவரோட வேலை செய்ற திறனை கூர்ந்து கவனிச்சேன். அவரோட கடினமான உழைப்பு எனக்கு திருப்தியை தந்தது. அதனால அவருக்கு புதுசா தொழில் தொடங்க பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணேன்"
"அவரு கடின உழைப்பாளி அப்படிங்கிறதுக்காக மட்டுமே நீங்க எப்படி சார் அவருக்கு பணம் கொடுத்துட முடியும்?"
"அது மட்டும் காரணம் இல்ல. அவர் மகிழனுக்கு ரொம்ப நெருக்கமான ஃப்ரெண்ட். ஒரு ஹை கிளாஸ் பையனோட ஃப்ரெண்ட்ஷிப்பை இவ்வளவு நல்லா மெயின்டைன் பண்ண முடியும்னா, அவர் ரொம்ப உண்மையானவரா இருக்கணும். அதை நான் மனசுல வச்சுக்கிட்டு தான் ஹெல்ப் பண்ணேன்"
"அவருக்கு கடன் கொடுத்ததுக்கு ஏதாவது டாக்குமெண்ட் வச்சிருக்கீங்களா?"
"ஓ... வச்சிருக்கேனே"
"நாங்க அதை பார்க்கலாமா?"
"தாராளமா பார்க்கலாம். நான் அதை கொண்டு வந்து உங்க கிட்ட காமிக்கிறேன்"
"அந்த டாக்குமெண்டை பத்தி ராகேஷ் ஏன் எங்ககிட்ட சொல்லல?"
"அவர் அதைப்பத்தி உங்க கிட்ட சொல்லலையா? ஒருவேளை நீங்க திடீர்னு அரெஸ்ட் பண்ணதால, அவர் பதட்டமாக இருக்காருன்னு நினைக்கிறேன்"
VOCÊ ESTÁ LENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...