17 மலரவனின் பிடிவாதம்

2.3K 87 11
                                        

17 மலரவனின் பிடிவாதம்

தவறான நேரத்தில் குமரேசன் தங்கள் வீட்டுக்கு வந்தால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் மணிமாறனும் மின்னல்கொடியும். ஆனால், எவ்வளவு நாளைக்குத் தான் மலரவனுக்கும் பூங்குழலிக்கும்  நடக்கவிருக்கும் திருமணத்தை அவர்கள் மற்றவர்களிடமிருந்து  மறைத்து வைக்க முடியும்? இன்னும் சில நாட்களில் எல்லோருக்கும் தெரிய தானே போகிறது?

"நீ எங்க இங்க?" என்றார் மணிமாறன் சாதாரணமாய்.

"டென்னிஸ் விளையாட கிளம்பினேன். போற வழியில அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்"

"ஓஹோ..."

"மகிழனோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா?"

"இல்ல, இன்னும் ஆகல"

"கல்யாண தேதியை முடிவு பண்ணணும்னு பேசிகிட்டு இருந்தீங்களே...?"

"ஆமாம். ஆனா, நிச்சயமானது மகிழனோட கல்யாணம் இல்ல, மலரவனோட கல்யாணம்" அதைக் கூற மணிமாறன் தயங்கவில்லை.

"என்ன்ன்னனது?" அதிர்ச்சி அடைந்தார் குமரேசன்.

"ஆமாம்"

"பொண்ணு யாரு?" என்றார் பெருமளவு எதிர்பார்ப்பை மனதில் தேக்கி.

"தில்லைராஜனோட மகள் பூங்குழலி"

"பூங்குழலியா? என்ன சொல்ற? ஆனா, நீயும், தில்லையும், மகிழன் தானே அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்பட்டீங்க?"

"மகிழன் அவளை கல்யாணம் பண்ணிக்க விரும்பலைனு சொல்லிட்டான்"

"ஏன்?"

"அதை விடு. அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல"

"அதுக்காக மலரவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீ கட்டாயப்படுத்தினியா?" என்றார் கனல் பறக்க.

"கட்டாயப்படுத்துறதா? நீ என்ன ஜோக் அடிக்கிறியா? உனக்கு மலரவனை பத்தி தெரியாது? அவனை யாராவது கட்டாயப்படுத்த முடியுமா?" என்றார் கிண்டலாய்.

"அப்புறம் எப்படி இந்த கல்யாணம் நடக்குது?"

"மலரவன் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டான்" என்றார் சாதாரணமாய்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Место, где живут истории. Откройте их для себя