15 வித்தியாசம்
அழைப்பு மணியின் ஓசை கேட்டு கதவை திறந்த சிவகாமி, அங்கு நின்றிருந்த மலரவனை பார்த்து புன்னகை புரிந்தார்.
"ஹாய் ஆன்ட்டி... பூங்குழலி எங்க?" என்றான்.
"அவளோட ரூம்ல இருக்கா தம்பி. நீங்க போங்க"
"இல்ல ஆன்ட்டி, நான் அவளோட உட்பி ஹஸ்பண்டா இங்க வரல, அவளோட பாஸா வந்திருக்கேன்" என்றான் பொருள் பொதிந்த புன்னகையோடு.
"பாஸா?" என்று முகத்தை சுருக்கினார் சிவகாமி.
"ஆமாம்... அவ என் கம்பெனியில வேலை செய்யப் போறா"
அவசரமாய் குறிக்கிட்ட சிவகாமி,
"உங்க கம்பெனியிலயா? வேண்டாம் தம்பி. அது தேவையில்லாத பிரச்சனையை கொண்டு வரும்" என்றார், மகிழனும் அங்கு தான் வேலை செய்கிறான் என்பதால்.
"நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கவே இல்லையே ஆன்ட்டி...! அவ என்னோட லண்டன் ப்ரான்சுக்காக வேலை செய்யப் போறா"
"லண்டன் ப்ரான்சுக்காகவா? அப்படின்னா குழலி லண்டனுக்கு போகப் போறாளா?"
"வேலை செய்றதுக்காக லண்டனுக்கு அவ போக போறதில்ல. ஆனா, ப்ரோக்ராமுக்காக போக வேண்டி இருக்கும்"
"லண்டனுக்கு போகாம, அவ லண்டன் ப்ரான்சுக்கு எப்படி வேலை செய்ய முடியும்?"
தன் கையில் இருந்த மடிக்கணினி பையை உயர்த்திக் காட்டி,
"இது மூலமா தான்" என்றான்.
அவனை ஆச்சரியமாய் ஏறிட்டார் சிவகாமி.
"நாங்க ஹாலிலேயே உட்கார்ந்து வேலை செய்கிறோம். நீங்க கொஞ்சம் பூங்குழலியை கூப்பிடுங்க" என்று வரவேற்பறையிலேயே வசதியாய் அமர்ந்து கொண்டான்.
சிவகாமி பூங்குழலியை அழைக்க, வெளியே வந்த அவள், மலரவனை பார்த்து திடுக்கிட்டாள். அவன் மடிக்கணினியை *கொடுத்து அனுப்புகிறேன்* என்று தானே கூறியிருந்தான்? அவளைப் பார்த்த மலரவன் புன்னகை புரிய, மென்மையாய் பதில் புன்னகை அளித்தாள் பூங்குழலி.
VOUS LISEZ
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Roman d'amourலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...