47 வருத்தத்தில் பூங்குழலி

1.5K 79 7
                                    

47 வருத்தத்தில் பூங்குழலி

கீர்த்திக்கு ஃபோன் செய்தார் குமரேசன். அந்த அழைப்பை ஏற்றாள் கீர்த்தி.

"சொல்லுங்க டாட்"

"நம்ம வீட்டுக்கு வர ரெடியா இரு"

"ஆனா ஏன் டாட்?"

"மணிமாறன் குடும்பத்துக்கு எதிரா நம்ம செயல்பட ஆரம்பிச்சதுக்கு பிறகு, நீ அங்கே இருக்க வேண்டாம். ஒருவேளை, அவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வந்தா, நீ அவங்க வீட்ல மாட்டிக்குவ. என்னால அப்படி நடக்க  விட முடியாது. அவங்களை நம்ம குறைச்சி எடை போடக்கூடாது. நம்மளோட திட்டம் அவங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா, நம்மளை உயிரோட தோலை உரிச்சிடுவாங்க"

"ஆனா என்ன சாக்கு சொல்லி நான் இங்கிருந்து வர்றது?"

"மயக்கம் போட்டு விழற மாதிரி நடி. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்"

"சரி"

அவர்களது திட்டப்படியே, மின்னல்கொடி, சிவகாமி, மற்றும் வடிவுக்கரசியின் முன்னிலையில் மயங்கி விழுந்தாள் கீர்த்தி. அவள் விழுவதை பார்த்த அவர்கள், பதட்டமானார்கள். அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தார் சிவகாமி. கீர்த்தி மெல்ல கண்விழித்தாள்.

"என்ன ஆச்சு உனக்கு?" என்றார் வடிவுக்கரசி.

"என்னன்னு தெரியல. எனக்கு தலை சுத்துது" என்றாள் அரை மயக்க நிலையில் இருப்பவளை போல.

"நீ உன்னோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு" என்றார் மின்னல்கொடி.

"பரவாயில்ல, ஆன்ட்டி" என்றாள் தன் தலையை அழுத்தி பிடித்தபடி கீர்த்தி.

"அவளை போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு, சிவகாமி" என்றார் மின்னல்கொடி.

"நீ போ. நாங்க தான் இங்க இருக்கோமே. நாங்க மின்னலை பார்த்துக்கிறோம்" என்றார் சிவகாமி.

சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்கு சென்றாள் கீர்த்தி. குமரேசனுக்கு ஃபோன் செய்து அவர் கூறியபடியே தான் செய்து முடித்து விட்டதை கூறினாள்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Dove le storie prendono vita. Scoprilo ora