60 தேன்நிலவு

1.8K 79 12
                                    

60 தேன்நிலவு

இந்தியாவில் காலடி எடுத்து வைத்த நேரம், குமரேசன் கைது செய்யப்பட்ட விஷயத்தை தெரிந்து கொண்டார் மணிமாறன். அவரை கைது செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மலரவன் செய்து கொண்டிருக்கிறான் என்று அவருக்கு தெரியும். ஆனால் அவன் அதை இவ்வளவு நேர்த்தியாய் செய்வான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதோடு மட்டும் அல்லாது, அவர்களை குடும்பத்தோடு  சிறைக்கு அனுப்புவான் என்றும் அவர் நினைக்கவில்லை. ரஞ்சித்தும் ராகேஷும் எப்படி அப்ரூவர்களாக மாறினார்கள் என்று அவருக்கு புரியவே இல்லை. அதை மலரவன் விவரித்த போது, அவரின் வியப்புக்கு அளவில்லை. அதைவிட அவருக்கு வியப்பளித்த விஷயம், மலரவனுக்கு மகிழன் உதவினான் என்பது தான்.

மகிழனின் கரத்தை பற்றிய மணிமாறன்,

"ஐ அம் சாரி நான் உன் வாழ்க்கையை நரகமா மாத்திட்டேன்" மனமார மன்னிப்பு கோரினார்.

"அதை விடுங்க பா. உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு. எனக்கு அதுவே போதும்"

"இதுக்கு அப்பறம் நீ என்ன செய்றதா இருக்க?"

"நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க பா?"

"உனக்கு எதோ பிளான் பண்ணி வச்சிருக்கிறதா மலரவன் சொன்னான்"

அவர்கள் இருவரும் மலரவனை பார்த்தார்கள்.

"ஆமாம், மகிழன் லண்டன் பிரான்ச்சோட பொறுப்பை கொஞ்ச நாளைக்கு ஏத்துக்கணும்னு நான் நினைக்கிறேன்" என்றான் மலரவன்.

"நானா?" என்று அதிர்ந்தான் மகிழன்.

"ஆமாம். உனக்கு அதை செய்ய ஸ்டீவ் ஹெல்ப் பண்ணுவான்"

"என்னால அதை செய்ய முடியும்னு நீ நினைக்கிறியா?"

"ஏன் முடியாது? நிச்சயம் உன்னால அதை செய்ய முடியும். ஒரு பிரான்ச்சை தனியா நின்னு லீட் பண்ணும் போது, அது உனக்கு பல அனுபவங்களை கொடுக்கும். அந்த அனுபவம், உன்னோட நம்பிக்கையை வளர்க்கும்"

"நீ என்ன சொல்ற, மகிழா?" என்றார் மணிமாறன்.

"என்னால செய்ய முடியும்னு மலரவன் நினைக்கிறதால, நான் நிச்சயம் அதை செஞ்சு பார்க்கிறேன்" என்றான் மகிழன்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Onde histórias criam vida. Descubra agora