4 இந்தியாவில் மலரவன்
"உங்க பிரண்டு தில்லைராஜன் தற்கொலை பண்ணிக்கிட்டார் சார்" என்றது அந்த முன்பின் தெரியாத குரல்.
"என்ன்னனது...??? யார் பேசுறது? இந்த விளையாட்டெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க"
"சார், கோபப்படாதீங்க. நான் தில்லைராஜனோட பக்கத்து வீட்டுக்காரன் பேசுறேன். உங்களை நான் அவர் வீட்டில் பல தடவை பார்த்திருக்கேன். பேங்க் காரங்க வந்து அவரோட எல்லா சொத்துக்களையும் சீஸ் பண்ணிட்டாங்க சார். வீட்டை காலி பண்ண அவருக்கு ஒரு நாள் டைம் கொடுத்து இருந்தாங்க. அவங்க கிளம்பி போன உடனேயே அவர் தற்கொலை பண்ணிக்கிட்டார் சார்"
மணிமாறனின் கையில் இருந்த கைபேசி நழுவியது.
"என்ன ஆச்சுங்க?" பதறினார் மின்னல்கொடி.
"தில்லை தற்கொலை பண்ணிக்கிட்டானாம்..." வெறித்த பார்வையுடன் கூறினார்.
"என்னங்க சொல்றீங்க? நல்லா விசாரிச்சு பாருங்க... அது உண்மையா இருக்காது"
நீர் கட்டிய கண்களுடன் அவரை ஏறிட்டார் மணிமாறன். அவரது அந்த *பார்வை* கூறியது, அவருக்கு கிடைத்தது நிச்சயமான செய்தி தான் என்று. அவர் பக்கத்தில் அமர்ந்து தோளில் சாய்ந்து வெடித்து அழுதார் மின்னல்கொடி.
எதைப் பற்றியும் யோசிக்காத மணிமாறன், உடனடியாய் மலரவனுக்கு ஃபோன் செய்தார். அப்பொழுது தான் குளித்து முடித்துவிட்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்த மலரவன், வேண்டா வெறுப்பாய் அந்த அழைப்பை ஏற்றான்.
"இப்ப என்ன?" என்றான்.
"மலரா..." அவரது தொண்டை அடைத்தது.
"அப்பா... என்ன ஆச்சு?" அவரது உடைந்த குரல், அவனை பதறச் செய்தது.
"தில்லை நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிட்டான்... அவன் தற்கொலை பண்ணிகிட்டான்"
"என்ன்ன்ன?" அவனது குரலில் அதிர்வலை உண்டானது.
"நான் அவன் வீட்டுக்கு போறேன்" அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் அழைப்பை துண்டித்தார் மணிமாறன்.
CZYTASZ
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romansலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
