58 முடிவு

1.6K 72 8
                                    

58 முடிவு

தன் மனைவி சுஜாதா மற்றும்  மகள் கீர்த்தியுடன் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் குமரேசன்.

"டாட், எதுக்கு இன்னும் நீங்க எங்களுக்கு எந்த குட் நியூசும் சொல்லாம இருக்கீங்க? பூங்குழலிக்கு என்ன ஆச்சு? எதுக்காக நீங்க அவளை லண்டன்ல ஃப்ரீயா அலைய விட்டுக்கிட்டு இருக்கீங்க? எதுக்கு உங்களுக்கு இவ்வளவு டைம் ஆகுது?" என்றாள் எரிச்சலுடன் கீர்த்தி.

"தேவையான எல்லா அரேஞ்ச்மென்டும் பண்ணிட்டேன். எதிர்பாராத விதமா லண்டன்ல மழை கொட்டி தீக்குது. அங்க எந்த ப்ரோக்ராமும் நடக்கல. எல்லா ப்ரோக்ராமும் கேன்சல் ஆகிகிட்டே இருக்கு. பிளான் பண்ண மாதிரி எம்எம் கம்பெனியோட ப்ரோக்ராம் நடக்குமான்னு தெரியல"

"இப்படி சொன்னா என்ன அர்த்தம்? நீங்க அவளை முடிக்க போறதில்லையா? எனக்கு நிம்மதியையே கொடுக்க மாட்டீங்களா?" என்றாள் ஏமாற்றத்துடன்.

"அது எப்படி நான் அவளை அவ்வளவு சுலபமா விட்டுடுவேன்? அவங்க ப்ரோக்ராம் தான் கேன்சல் ஆகும்னு சொன்னேன். ஆனா, நான் போட்ட புரோகிராம் கேன்சல் ஆகும்னு சொன்னேனா? எது எப்படி இருந்தாலும்,  அவள் ஏர்போர்ட் போற வழியிலேயே வில்லியம் அவளை தீர்த்துடுவான்"

"பூங்குழலி கொல்லப்பட்ட மேட்டர் மணிமாறன் குடும்பத்துக்கு தெரிஞ்சா, அவங்க எல்லாரும் அலர்ட் ஆயிடுவாங்க. அதனால, அது அவங்க காதுக்கு வரதுக்கு முன்னாடி, முதல்ல அவங்களை முடிங்க" என்றார் சுஜாதா, ஏதோ அவர்களெல்லாம் கொசுவை போல.

"ஆமாம், நம்ம மணிமாறன் குடும்பத்தை குறைச்சி எடை போட்டுடக்கூடாது... முக்கியமாக மலரவனை..."

"ஆமாம் டாட், நம்ம நினைச்சதை விட அவங்க ரொம்ப ஸ்மார்ட்" என்றாள் கீர்த்தி கடுகடுப்புடன்.

"அந்த முதுகெலும்பு இல்லாத மகிழன், இப்படி மாறுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல" என்றார் சுஜாதா எரிச்சலுடன்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க. சீக்கிரமே அவங்க பூண்டோட கைலாசம் போன நல்ல விஷயம் நம்ம காதுக்கு வரும்" என்றார் குமரேசன்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Wo Geschichten leben. Entdecke jetzt