56 அடுத்த கட்டம்
ரஞ்சித்தின் மூலமாக குமரேசனின் திட்டத்தை தெரிந்து கொண்ட மகிழன்,
"இப்போ நம்ம என்ன செய்யறது மலரா?" என்றான்.
"ரஞ்சித் சாரும், ராகேஷும், அவங்க தண்டிக்கப்பட கூடாதுன்னு நினைச்சா, நான் சொல்றதை கேட்கணும்" என்றான் மலரவன் அவர்களை பார்த்தபடி.
ரஞ்சித் எதுவும் கூறுவதற்கு முன்,
"நீங்க எது சொன்னாலும் நான் கேக்குறேன். தேவைப்பட்டா, குமரேசன் எனக்கு கொடுத்த பணத்தை கூட திருப்பிக் கொடுத்துடுறேன்" என்றான் ராகேஷ்.
"குமரேசன் கிட்ட இருக்கிற அக்ரீமெண்ட் பேப்பர்ஸை திரும்ப வாங்கணும்னா, நீ அதைத் தான் செஞ்சாகணும் "
"ஆனா, அப்படி செஞ்சா அவர் என்னை சந்தேகப்படுவாரே"
"ஆமாம். அவரோட பணம் உனக்கு வேண்டாம், அவரோட கம்பெனியில ஒரு வேலை கொடுத்தா போதும்னு சொல்லு. அப்போ அவர் உன்னை நம்புவாரு. அந்த பணத்தை உன்னையே வச்சிக்க சொல்லி சொல்லுவாரு. ஆனா நீ அதுக்கு ஒத்துக்காதே. போலீஸ் உன்னை சந்தேகப்படுறதால தான் அதை திரும்பி கொடுக்கிறேன்னு சொல்லு. பணத்தை வாங்கிக்கிட்டு, போலீஸோட சந்தேகத்தில் இருந்து என்னை காப்பாத்துங்கன்னு கேளு"
"சரி"
"ஏற்கனவே குமரேசன் போலீஸ்ல மாட்டிக்கிட்டாரு. அவரை முடிக்கிறதுக்கு எனக்கு உன்னுடைய உதவி தேவையில்ல. இது கடைசியா நான் உனக்கு கொடுக்கிற சந்தர்ப்பம். அதை மறந்துடாத" என்றான் மலரவன்.
புரிந்தது என்பது போல் தலையசைத்தான் ராகேஷ்.
"நீ போய் நான் சொன்னதை செய். அப்போ தான், நான் இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியும். ஒருவேளை நீ டிலே பண்ணா, நான் உனக்காக காத்திருக்க மாட்டேன். உன்னை காப்பாத்திக்க உனக்கு கிடைச்சிருக்கிற கடைசி சந்தர்ப்பம் இது தான். ஒரு வேளை நீ வேற ஏதாவது செய்ய நினைச்சா, உன்னை யாராலயும் காப்பாத்த முடியாது" என்று ராகேஷை எச்சரித்தான் மலரவன்.
ВЫ ЧИТАЕТЕ
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Любовные романыலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
