18 அது வேறு...!

1.8K 74 10
                                    

18 அது வேறு

"என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் வைஃபா என் கூட லண்டன்  வர்றதுல உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன். என்ன சொல்ற பூங்குழலி? கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம லண்டனுக்கு போகலாம்ல?" என்று நேரடியாக பூங்குழலியிடமே  கேட்டு அவளை திக்குமுக்காட வைத்தான் மலரவன்.

"சொல்லு பூங்குழலி, என்ன முடிவு செய்யப் போற? இந்த முடிவை நீ எடுக்கணும்னு நான் நினைக்கிறேன். கல்யாணத்துக்கு முன்னாடி என் கூட வர உனக்கு சங்கடமா இருந்தா, கல்யாணம் பண்ணிக்கிட்டு போகலாம்"

சிவகாமியை பார்த்தாள் பூங்குழலி. ஆனால் அவரோ, மின்னல்கொடியின் பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டார். அவருக்கு தெரியும் நிச்சயம் பூங்குழலி தன்னை இதில் இழுத்து விடுவாள் என்று.

"அம்மா..." என்று அவரை அழைத்தாள் பூங்குழலி.

"இல்ல, பூங்குழலி. என் கூட லண்டனுக்கு வர மாட்டேன்னு  நீ தான் சொன்ன. அதனால இந்த முடிவை நீ மட்டும் தான் எடுக்கணும்" என்றான் மலரவன் விடாப்பிடியாக.

"அம்மா முடிவு பண்ணுவாங்க" என்றாள் தலை தாழ்த்தி.

"ஏன்? அவங்க ஏன் முடிவு பண்ணனும்? அவங்க முடிவை நீ ஏத்துக்குவேன்னா, எதுக்காக என் கூட லண்டனுக்கு வர மாட்டேன்னு சொன்ன? அவங்க சொல்றதை கேட்டு நடக்க வேண்டியது தானே?" கேள்வி எழுப்பினான் அவன்.

அவன் முன் நிற்கவே தடுமாறினாள் பூங்குழலி. அவன் இந்த அளவிற்கு ஆளுமை படைத்தவன் என்று அவளுக்கு தெரியாது.

"எனக்கு நேரடியான பதில் வேணும் பூங்குழலி. ஒரு விஷயத்தை முதல்ல தெளிவா  புரிஞ்சுக்கோ. எது எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும். அதை நான் நடத்திக் காட்டுவேன். இப்போ எனக்கு பதில் சொல்லு" என்றான் பிடிவாதமாய்.

சில நொடிகள் எடுத்துக்கொண்டு, ஆழமாய் மூச்சை இழுத்து, திடமாய் அவனை ஏறிட்ட அவள்,

"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள். அவள் அதை மின்னல்கொடியை பார்த்து தான் கூறினாள் என்றாலும், மலரவனின் முகம் மலர்ந்ததை அவள் உணர்ந்தாள்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now